ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு, தங்கள் இயக்கத்தில் சேர்வதற்கு இந்திய நகரங்களில் இருந்து ஆள்சேர்த்து வருகிறது. அதிலும், மேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை குறிவைத்து, அவர்களை தங்கள் இயக்கத்தில் சேர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளதாக மத்திய உள் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

இது குறித்து மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறுகையில், மேற்கு வங்கத்தின் எல்லையோர மாவட்டங்களை குறித்து ஐ.எஸ்., இயக்கத்தினர் ஆள்சேர்த்து வருகின்றனர். இதுதொடர்பாக மேற்குவங்க அரசிடம் பல முறை எச்சரித்தும், அவர்கள் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கடுமையாக சாடி உள்ளார்.

மாநில டிஜிபி.,க்கள் அளவிலான கூட்டத்திலேயே உள் துறை செயலாளர் கோயல் இதனை மேற்கு வங்க டிஜிபி ஜி.எம்.பி.ரெட்டியிடம் கூறியதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சைபர்தொடர்புகள் மூலமாக மட்டுமின்றி, மக்களோடு மக்களாக கலந்தும் ஐ.எஸ்., பயங்கர வாதிகள் தங்கள் இயக்கத்திற்கு ஆட்களை தேர்வுசெய்து வருகின்றனர். சமீபத்தில் புலனாய்வுத் துறை தேசிய அளவில் நடத்திய ஆய்வில், ஐ.எஸ்., இயக்கத்தினர் அதிகம் ஆள்சேர்க்கும் நகரங்களில் ஸ்ரீநகர், கவுகாத்தி, சின்ச்சவத்(புனே) அடுத்தபடியாக 4 இடத்தில் மேற்குவங்கம் உள்ளது.

மேற்கு வங்கத்தில் 16 முதல் 30 இளைஞர்கள் ஐ.எஸ்.,இயக்கத்துடன் ஆன்லைன் தொடர்பில் இருந்துவருவது தெரியவந்துள்ளது. இவர்கள் ஐ.எஸ்., இயக்கம் பற்றிய கருத்துக்களை பெங்காலி மொழியில் மொழி பெர்த்து வெளியிட்டிருப்பதுடன், எல்லையோர கிராமங்களில் ஐ.எஸ்.,க்கு ஆதுரவாக போஸ்டர் களையும் ஒட்டி உள்ளனர். நாடியா, முர்ஷிதா பாத் உள்ளிட்ட 17 கிராமங்களில் இருந்து 147 போஸ்டர்கள் மத்திய பாதுகாப்பு படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.