அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதுதான், அசோக் சிங்காலுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் கூறியுள்ளார்.

விஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் அண்மையில் மரண மடைந்தார். டெல்லியில் நேற்று அவருக்கு அஞ்சலிசெலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், ''அசோக் சிங்காலுக்கு இருகனவுகள் இருந்தது. அதில் ஒன்று அயோத்தியில் ராமர்கோவில் எழுப்புவது. மற்றொன்று உலகம்முழுக்க வேதங்களை பரப்புவது.

அவரது கனவு களை நிறைவேற்றும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. முதலில் ராமர் கோவிலை கட்டுவதற்கு தொடர்ச்சியான முயற்சிகளை நாம்மேற்கொள்ள வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்'' என்றார்.

Leave a Reply