உலகம் எதிர் கொண்டுள்ள புவி வெப்ப மயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற சுற்றுச் சூழல் பிரச்னைகளை தீர்க்க இந்திய கலாசாரமே நிரந்தரதீர்வாக இருக்கும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.

 மத்தியப் பிரதேச மாநிலம், போபாலில் புவி வெப்ப மயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றம் தொடர்பான இரண்டு நாள்  தேசியமாநாடு நடைபெற்று வந்தது. ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாநாட்டின் கடைசி நாள் நிகழ்ச்சியில் சிறப்புவிருந்தினராக கலந்துகொண்டு சுஷ்மா ஸ்வராஜ் பேசியதாவது:

 இந்தியத் தத்துவம், வாழ்க்கைமுறை, கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவை சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அறிவியலை அடிப்படையாக கொண்டதாகும். இது குறித்து உலக மக்களிளிடம் எடுத்துரைக்கப் பட வேண்டும். உலகம் தற்போது எதிர் கொண்டுள்ள புவி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் போன்ற இயற்கைசார்ந்து ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு இந்தியக் கலாசாரமும், பண்பாடும் தான் நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சுஷ்மா பேசினார்.

Leave a Reply