மத்திய அரசு முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று 940 கோடி ரூபாய் இங்கிருந்து கோரிக்கை வைத்த சில மணி நேரங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது என்றால் எந்த அளவிற்கு தமிழ் மக்கள் மீது மத்திய அரசு அக்கறை கொண்டிருக்கிறது என்பது தெரிகிறது என்பது மட்டுமல்ல நேற்று மலேசியாவில் பேசும் போது இந்த தேசத்தின் விடுதலை இயக்கதிலும் இந்த நாட்டை முன்னேற்றுவதிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது என்று பேசிய பேச்சு தூரத்தில் இருந்தாலும் நம் தமிழர்கள் மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார் என்று தெரிகிறது.

தமிழ் மொழியில் பெருமை சேர்க்கும் அளவிற்கு மலேய  நாட்டில் தமிழில் பேசியதின் பெருமை யாரும் ஒரு வார்த்தை கூட பேசாதிருப்பது தமிழக அரசியல் என்பது புரிந்ததுதான் இருக்கிறது. ஆனால் தமிழக மக்கள் அந்த அன்பின் பெருமையை உணர்வார்கள். அதே போல் நம் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் குறளை கையாண்டிருப்பது எவ்வளவு மனநிறைவுத் தருகிறது என்பதும் நாம் உணரத்தக்கது.

ஆனால் இங்கு தமிழ்பற்று, தமிழன் பெருமை என்று தமிழை வைத்து அரசியல் செய்பவர்கள் பாரதப் பிரதமர் வெளிநாட்டில் தமிழில் ஆற்றிய உரையை குறிப்பிட்டு பாராட்டாதது இதிலும் அரசியலே என்பதை உணர்த்துகிறது. சமஸ்கிருதம் என்ற வார்தை வந்தாலே சண்டையிடும் மாற்றுக்கட்சியினர், ஹிந்தி என்ற வார்த்தை வந்தாலே கடுமையாகக் கண்டிக்கும் மாற்றுக்கட்சியினர்.

நம் தமிழுக்கு பெருமை சேர்த்திருக்கிறார் என்றாலும் கண்டு கொள்ளாமல் இருப்பது தமிழக அரசியல். ஆனால் அதை தமிழக மக்கள் அந்த அன்பை உணர்வார்கள். இந்த தமிழக மக்களின் நலனுக்காக உடனே நிவாரணம் ஏரக்குறைய 1000 கோடி மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. அந்த பணம் உண்மையிலேயே பரிதவித்துக் கொண்டிருக்கும் மக்களின் நலனிற்காக செலவிடப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் நடைமுறைப்படுத்துவதில்லை.

முதல்வர் தனிப்பட்டமுறையில் கண்காணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கொடுக்கும் பணம் யாருக்குக் கிடைக்க வேண்டுமோ அவர்களுக்கு கிடைக்கவும், முறைப்படுத்த வேண்டிய திட்டங்களும், நிவாரணமும் யாருக்கு தேவையோ அவர்களுக்குக் கிடைக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். மத்திய குழு அனுப்புவதற்கு முன்னாலேயே தமிழக அரசு கேட்டதில் கணிசமாக தொகையை தமிழக மக்கள் நலன்கருதி அறிவித்த நம் பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Tags:

Leave a Reply