சட்டசபை தேர்தலில் இன்றைய முடிவின்படி பெரும்பான்மையான மாவட்டங்களில் தி.மு.க, ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாதநிலை உருவாகியுள்ளது. எதிர்கட்சி வரிசையில் அமரும் அளவிற்கு கூட தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்புகள் கிடைக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தி.மு.க., கடும் அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

தற்போதைய நிலவரத்தின்படி தி.மு.க., கூட்டணி 35தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அ.தி.மு.க., கூட்டணி 190க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகிக்கிறது

தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தை மற்றும் கொங்குநாடு முன்னேற்றகழகத்தினர் ஒரு தொகுதியில் கூட முன்னிலை வகிக்கவில்லை. இந்த இரண்டு கட்சியினரும் தலா ஒருதொகுதியையாவது பிடிப்பார்களா என்ற கேள்வி உருவாகியுள்ளது .

மதுரை மற்றும் கோவையில் இருக்கும் 10 தொகுதிகளிலும், தி.மு.க., ஒரு இடத்தை கூட பிடிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு-இடத்தில் மட்டும் தி.மு.க. கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தர்மபுரி, சிவகங்க‌ை மாவட்டங்களில் அனைத்திலும் அ.தி.மு.க, கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் மொத்தம் 6தொகுதிகளில் அனிதா-ராதாகிருஷ்ணன் மட்டும் வெற்றி பெறுவார் என்ற நிலையில் தி.மு.க., உள்ளது.

Tags:

Leave a Reply