பாஜகவில் இருந்து விலக 'தாத்தா' பெயரை 'சித்தப்பா' பயன்படுத்தியிருக்க கூடாது‍: கலாம் பேரன் சலீம்

ராமேஸ்வரம்: பாஜனதா கட்சியில் இருந்து விலகுவதற்கு தாத்தா பெயரை சித்தப்பா காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் பேரன் சேக்சலீம் தெரிவித்தார்.

சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பாஜனதாவில் இருந்து விலகியது குறித்து கலாமின் பேரனும், சமீபத்தில் அக்கட்சியில் சேர்ந்தவருமான சேக்சலீமிடம் பேசினோம்.

"தாத்தா கலாமின் பெயரில் அவர் வாழ்ந்த டெல்லி இல்லத்தில் அறிவுசார் மையம் அமைக்க மத்திய அரசுக்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் கோரிக்கை விடுத்திருந்தோம். ஆனால் தாத்தா வசித்து வந்த இல்லம் அமைந்திருக்கும் பகுதி மிக அதிகமான பாதுகாப்பு வளையத்திற்குட்பட்ட பகுதியாகும். அந்த வீட்டின் இருபுறமும் ராணுவம் மற்றும் கடற்படை தளபதிகளின் வீடுகள் உள்ளது. பின்புறம் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் இல்லம் உள்ளது.

இவர்களை சந்திக்க முக்கிய வி.ஐ.பி.க்கள் வரும் நிலையில், அந்த பகுதி முழுவதும் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறிவிடும். இது போன்ற காரணங்களால் தாத்தா வசித்த வீட்டில் அறிவுசார் மையம் அமைக்க வாய்ப்பில்லை என தெரிவிக்கப்பட்டது. எனவேதான் அவரது உடமைகள் எங்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இவற்றை ராமேஸ்வரத்தில் அமைய உள்ள நினைவகத்தில் வைக்க உள்ளோம். இதனிடையே டெல்லியில் நினைவு இல்லம் அமைக்க மாநில அரசு தொடர்பு கொண்டுள்ளது. அதற்கான பணிகள் தற்போதுதான் துவங்கியுள்ளது. அது முடிந்தபின் தாத்தா பயன்படுத்திய புத்தகங்கள் மற்றும் அவர் உபயோகித்த பொருட்களை அனுப்பி வைக்க உள்ளோம்.

இந்நிலையில் தாத்தா பெயரில் அறிவுசார் மையம் அமைக்காததை கண்டித்து எனது சித்தப்பா காஜா செய்யது இப்ராஹிம் பி.ஜே.பி.யில் இருந்து விலகியிருப்பது ஏற்க கூடியதாக இல்லை. எனது தாத்தா கலாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர். கட்சியில் இருந்து விலகுவதற்கு அவரது பெயரை காரணமாக பயன்படுத்தியிருக்க கூடாது. ‪#‎யாரோ‬ #‎சிலரின்‬ ‪#‎தவறான‬ ‪#‎தூண்டுதலில்‬ இப்படி செய்திருக்கிறார்" என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.