படத்தில் உள்ளவர் பெயர் மிக்காயில் கொடோர்கோவ்ஸ்கி. ரஷ்ய நாட்டைசேர்ந்தவர். மிக பெரிய கோடிஸ்வரர். போர்பஸ் பத்திரிக்கையில் பெயர் வரும்அளவுக்கு ரஷ்யாவின் செல்வந்தர். அதிபர் போரிஸ் எல்சின் காலத்தில் அவருக்கு பொருளாதார ஆலோசகராக கூட இருந்துள்ளார்… அவ்வளவு பெரிய சக்தி வாய்ந்த மனிதரை அடுத்து வந்த அதிபர் புட்டீன் சிறையில் அடைத்தார்.. வரி ஏய்ப்பு, தவறான எண்ணெய் பரிவர்த்தனை, தவறான  முறையில் சொத்து சேர்த்த காரணத்தால், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்க பட்டார்.. அவரின் பல சொத்துக்கள் பங்குகள் முடக்கினார்.. தயவு தட்சணை இல்லாமல் நடவடிக்கை எடுத்தார்…

இன்று இந்திய பிரதமர் மோடிஜி அவர்களும், புட்டினை போல எவருக்கும் கருணை காட்டாமல், வரிஏய்ப்பு செய்து, சொத்து சேர்ப்பவர்களை, நாட்டின் வளத்தை கொள்ளை அடிப்பவர்களை, சட்டத்துக்கு புறம்பான முறையில் வியாபாரம் செய்து பணம் குவித்து வைத்திருப்பவர்களை, அவர்கள் எந்த துறையில் எவ்வளவு சக்தி மிக்கவராக இருந்தாலும், சற்றும் தயங்காமல் நடவடிக்கை எடுத்து, அவர்களை செழுத்தவேண்டிய வரிகளை வசூலிக்க வேண்டும். தவறான முறையில் சேர்த்த சொத்துக்களை முடக்க வேண்டும்.

அமீர்கான் 350 கோடி வரிஏய்ப்பு செய்து உள்ளாராம்.. ஒரே ஒரு சாதாரண சினிமா நடிகன் இவ்வளவு வரி ஏய்ப்பு செய்திருந்தால், நாடு முழுவதும், தொழில் அதிபர்கள், சினிமா உலகத்தினர், அரசியல்வாதிகள், எவ்வளவு கருப்புபணத்தை ஒளித்து வைத்து இருப்பார்கள்? நினைக்கவே பயங்கரமாக உள்ளது.

இவர்கள் மட்டும் இன்றி, வெளிநாட்டிலிருந்து, இங்குள்ள மிஷினரிகளுக்கும், இஸ்லாமிய இயக்கங்களுக்கும் , மற்றும் அரசு சாரா அமைப்புக்களுக்கும் வரும் பில்லியன் கணக்கான பணத்திற்கான கணக்கு வழக்குகளை அரசுக்கு முறைப்படி அறிவிக்க சொல்ல வேண்டும். கணக்கில் வராத வரி செழுத்தப்படாத அனைத்து சொத்துக்களையும், பணத்தையும் முடக்க வேண்டும். மதமாற்றத்துக்கும் , பயங்கரவாதத்துக்கும், நாட்டை துண்டாடநினைக்கும் சமூக விரோதிகளுக்கும், வரும்பணத்தை முழுமையாக முடக்க வேண்டும். தவறான முறையில் பணம் பெறுபவர்களை சிறையில்அடைத்து, அவர்கள் மீது வழக்கு நடத்த படவேண்டும்.

இந்த ஒரு வருட காலத்தில், நாட்டின் முனேற்றத்துக்கு கடுமையாக உழைக்கும் பிரதமர் மோடி…

மேலே சொன்ன, அனைத்து, தொழில்அதிபர்கள், நடிகர்கள், அரசியல்வாதிகள், விஷயத்திலும், மிஷினரி , இஸ்லாமிய இயக்கங்கள், அரசு சாரா இயக்கங்கள் விஷயத்திலும், கடுமையான போக்கை வெளிபடுத்த வில்லை என்று என்ன தோன்றுகிறது… அப்படியே கடும் நடவடிக்கை எடுத்தாலும், எதையும் வெளிப்படையாக செய்யாமல், மக்களுக்கு தெரிய படுத்தாமல், நடவடிக்கை எடுக்கபடுகிறது என்று நினைக்கிறேன்..

அதன் வெளிப்பாடே… இந்த மாட்டு பிரச்சனை, எழுத்தாளர் பிரச்சனை, விருது பிரச்னை, சகிப்புதன்மை இன்மை , ஹிந்துத்வா பாசிசம் , நாட்டை விட்டு வெளியேற போகிறேன் என்ற பிரச்சாரங்கள்..

அறுபது வருடங்கள்மேலாக தங்கள் சொந்த சுயநலத்துக்காக இந்தநாட்டை சுரண்டிய அனைத்து, கொள்ளையர்கள் மீதும், எந்த வித கருணை காட்டாமல், எந்த ஒரு எதிர் பிரச்சாரங்களுக்கும் பின் வாங்காமல், கடுமையான நடவடிக்கை எடுத்து, இந்த தேசதுரோக கூட்டங்களை மக்களுக்கு அடையாளம் காட்ட வேண்டும்..

பிரதமர் மோடி இந்த ஒரு வருட காலத்தில், தன் எதிராளிகளிடம் அதிகம் மென்மை போக்கை கையாண்டு வருகிறார். தேசத்தின் வளர்ச்சி ஒன்றே ஒரே குறிகோளாக ஒரு பக்கம் இருந்தாலும், அந்த வளர்ச்சியை தடுக்க நினைக்கும், அனைத்து கயவர் கூட்டங்களின் சதிகளை முறியடிக்க வேண்டிய நேரம் இது!

இந்த நாசகார கும்பலின் பிரச்சாரங்கள் எல்லை மீறி விட்டன! அதை முறியடிக்க சாட்டையை சுழற்ற வேண்டிய தருணம் வந்து விட்டது!

குஜராத்தின் சிங்கம் அதையும் செய்து முடிக்கும்!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.