சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, பிப்.14ஆம் தேதியை பெற்றோர் தினமாக அனுசரிக்கப்பது என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த நான்கு வருடங்களாக பெற்றொர் தினம் அந்த மாநிலத்தில் அனுசரிக்கபட்டு வந்தாலும், இப்போது அதிகாரபூர்வமாக பிப்.14ம் தேதி பெற்றோர் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, பிப்ரவரி 14ம் தேதியன்று சத்தீஸ்கரில் இனி காதல தினம் அல்ல. அது பெற்றோர்களை போற்றும், வழிபடும் தினம்.

"2013 மற்றும் 2014ம் ஆண்டு மாதாபிதா தினமாக பிப்ரவரி 14ம் தேதி அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இப்போது அது முழுநடைமுறைக்கு வருகிறது. இதுகுறித்த புதிய உத்தரவுகள் இனி எதுவும் பிறப்பிக்கப்பட போவதில்லை, ஒவ்வொரு ஆண்டும் பிப்.14ம் தேதி இனி பெற்றோர்தினமே." என்று சத்தீஸ்கர் மாநில கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இந்நாளில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களை அழைத்துவந்து அவர்களை வழிபட வேண்டும். என்று அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநில கல்வித் துறை அமைச்சர் கேதர் காஷ்யப் இதுகுறித்து கூறும்போது, "இது புதிதல்ல. 4 ஆண்டுகளாக பெற்றோர்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காதலர் தினத்தை மறுப்பதோ, அதனை கொண்டாடக் கூடாது என்பதோ இந்த உத்தரவின் நோக்கமல்ல." என்றார்.

Leave a Reply