கோவையில் 1998., பிப்., 14 ம் தேதி , பல்வேறு இடங்களில் நடந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 58 பேர் கொல்லப்பட்டனர். 250 க்கும் மேற்பட்டோர் படு காயம் அடைந்தனர். பா.ஜ., மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி, கோவையில் தேர்தல் பிரசாரத்திற்காக விமானநிலையத்தில் வந்திறங்கிய போது, மாலை 4.30 மணியளவில்

 

இச்சம்பவம் நடந்தது. இதுதொடர்பாக அல் உம்மா இயக்க தலைவர் பாட்சா, அன்சாரி, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்பட 167 பேர் கைது செய்யப்பட்டு கோவை தனிக்கோர்ட்டில் விசாரணை நடந்தது.

இதனால் ஆண்டு தோறும் பிப்.,14 ம் தேதி கோவை குண்டுவெடிப்பு தினமாக அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நகர் முழுவதும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர்.

குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக, பா.ஜ.க நேற்று மாலை ஆர்.எஸ்.,புரத்தில் அஞ்சலி கூட்டம் நடத்தியது. இதற்கு மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply