‘‘நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடரில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. விவாதம் நடத்தி தீர்வு காண்பதற்கு நாடாளு மன்றத்தைவிட சிறந்தஇடம் வேறு எதுவும் இல்லை’’ என்று பிரதமர் நரேந்திரமோடி கூறினார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. டிசம்பர் 23-ம்தேதி நடக்கும் இந்த தொடரின்போது, தாத்ரி படுகொலை சம்பவம், சகிப்பின்மை, பாஜக அமைச்சர்களின் சர்ச்சைக்குரிய பேச்சுகள், விலைவாசி உயர்வு உட்பட பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், கூட்டத்தொட ரில் பங்கேற்க வந்த பிரதமர் மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:

விவாதமும் பேச்சு வார்த்தையும் நாடாளுமன்றத்தின் ஆன்மாக்களாக உள்ளன. விவாதம் நடத்தவும் தீர்வு காணவும் நாடாளுமன் றத்தை விட சிறந்த இடம் வேறு எதுவும் இல்லை. நாட்டின் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் அவையில் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. சிறந்த விவாதங்கள், புதிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் விதமாக இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இருக்கும் என்று நம்புகிறேன்.

இந்ததொடரை சுமூகமாக நடத்துவது குறித்து எல்லா அரசியல் கட்சி தலைவர்களுடனும் நான் ஆலோசனை நடத்தினேன். அனைத்துக்கட்சி கூட்டத்தில் எல்லா கட்சி யினரும் பங்கேற்றது மகிழ்ச்சி அளித்தது. நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பட அனைத்து எம்.பி.க்களும் நாடாளுமன்றத்தில் செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.

சகிப்பின்மை அதிகரித்துவருவது குறித்து விவாதம் நடத்த எதிர்க் கட்சிகள் விரும்பினால், எல்லா பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்பதை ஏற்கெனவே அவர்களுக்கு உறுதியாக கூறியிருக்கிறோம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

இந்திய அரசியல் அமைப்புசட்டம் இயற்றப்பட்ட தினம் (1949, நவ.26) முதல் முறையாக நேற்று கொண்டாடப்பட்டது. இதற்காக நாட்டுமக்களுக்கு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘‘இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்க பாடு பட்ட அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களை இந்நாளில் நாம் நினைவுகொள்வோம். அரசியல் சாசனத்தை நாம் எல்லோரும் கட்டிகாக்க வேண்டும். நாடுமுழுக்க அரசியல் சட்டம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்க வேண்டும்’’ என்று மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply