பாஜக மாநில துணைத் தலை வராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வெளி யிட்ட அறிக்கை:

பாஜக மாநில துணைத் தலை வராக முன்னாள் மத்திய இணை அமைச்சர் நெப்போலியன், மாநிலச் செயலாளராக புரட்சி கவிதாசன், மாநில செயற்குழு உறுப்பினர், விவசாய அணியின் மாநில துணைத் தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. வேதரத் தினம், மாநில செயற்குழு உறுப் பினராக முன்னாள் எம்.எல்.ஏ. மணி, கலைப் பிரிவு புரவலராக இசையமைப்பாளர் கங்கை அமரன், மாநில தேர்தல் பிரிவு தலைவராக முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி மலைச்சாமி, முன் னாள் ராணுவத்தினர் பிரிவு மாநிலத் தலைவராக கர்னல் பாண்டியன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநில செயற்குழு உறுப் பினர், கலைப் பிரிவு துணைத் தலைவர்களாக திரைப்பட இயக்குநர் கஸ்தூரிராஜா, கீதா ராஜசேகர், மாநில செயற்குழு உறுப்பினர், மருத்துவப் பிரிவு மாநில துணைத் தலைவராக டாக்டர் சரவணன், பிரச்சார பிரிவு மாநில துணைத் தலைவராக நடிகை குட்டி பத்மினி, கலைப் பிரிவு மாநிலச் செயலாளராக நடிகை காயத்ரி ரகுராம் ஆகி யோர் நியமிக்கப்பட்டுள்ள னர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply