முதலில் இந்தியா’ என்பதே எனது அரசின் மதம், அரசமைப்புச் சட்டம் புனித நூல், நமது அரசமைப்புச் சட்டத்தின் புனிதத் தன்மையையும் வலிமையையும் மக்கள் உணர்ந்திட வேண்டும். இது காலத்தின் கட்டாயம் . அரசமைப்புச் சட்டத்தின் அடிநாதம் நான், நீ அல்ல, நாம் என்பதே ஆகும். இதை முன்னெடுத்து செல்வது அவசியம். இது தான் அரசின் லட்சியம்.

இந்த ஆண்டு முதல் நவம்பர் 26-ம்தேதி அரசமைப்பு சட்ட  தினம் கொண்டாடப்படும். இது ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தினை எந்தவகையிலும் பலவீனப்படுத்தாது.

நமதுதேசத்தை கட்டமைத்ததில் எல்லா அரசுகளுக்கும் பிரதமர்களுக்கும் முக்கியபங்கு உண்டு. ஒவ்வொருவரின் பங்களிப்பால் தான் இந்நாடு வளர்ந்து செழிப்படைந்துள்ளது.

தேசத் தந்தை மகாத்மா காந்தி, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சட்ட மேதை பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் ஒருங்கிணைந்து செயல்பட்டு நாட்டை கட்டிஎழுப்பினர். சுதந்திரகாற்றை சுவாசிக்கச் செய்த அவர்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.

நாடாளுமன்ற விவாதம் ஒன்றின் போது அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு எதிர்க் கட்சித் தலைவரின் கருத்தை ஆமோதித்து ஏற்றுக்கொண்டார். இது அவரது பெருந்தன்மைக்கு உதாரணம்.

அரசர்கள், இளவர சர்களால் உருவாக்கப்பட்டதல்ல நமது நாடு, மக்களால் உருவாக்கப்பட்டது. நாட்டில் ஜன நாயகத்தை வலுப்படுத்தி அரசமைப்புச் சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் மக்கள் அறிந்துகொள்ள வேண்டும்.

இந்தியர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பது நமது அரசமைப்பு சட்டம் தான். தாழ்த்தப்பட்டோர், ஒடுக்கப்பட்டோரின் நலன்களை சட்டம் பாதுகாக்கிறது. இந்திய அரசமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கர், பல்வேறு பாகு பாடுகள், இன்னல்களைச் சந்தித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட இன்னல்களை மையப்படுத்தி சட்டத்தை வரையறுக்க வில்லை. அதுதான் அவரது பெருந்தன்மை.


வேற்றுமையில் ஒற்றுமையே இந்தியாவின் பலம். அதனை மேலும் வலுப்படுத்திடவேண்டும். இந்தியர்கள் அனைவரும் கவுரவத்துடன் வாழவேண்டும். ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இதுதான் அரசின் விருப்பம்.

‘முதலில் இந்தியா’ என்பதே எனது அரசின் மதம், அரசமைப்பு சட்டம் புனித நூல் போன்றது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படியே நாட்டில் ஆட்சி நடத்தப்படும்.

அனைத்து சமுதாய மக்கள், மதங்களை சேர்ந்த மக்களின் முன்னேற்றத் துக்காக மத்திய அரசு பாரபட்சமின்றி பாடுபடும். நமது நாட்டில் சுமார் 80 கோடி இளைஞர்கள் உள்ளனர். இதை விட வேறு வளம் தேவையில்லை. நமது மனித வளத்தை வாய்ப்புகளாக மாற்றவேண்டும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் தொடர்பாக கடந்த இரு நாட்களாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. இதற்குப் பதில் அளித்து பிரதமர் மோடி மக்களவையில்  பேசியது

Leave a Reply