தமிழகத்தில் பாஜக. தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு அமல் படுத்தப்படும் என்று தேசிய பொதுச் செயலாளர் முரளிதர ராவ் தெரிவித்துள்ளார்.

ராமநாத புரத்தில் தேவேந்திரர் தன்னார்வ அறக் கட்டளை நடத்திய மதுரை பிரகடனம் குறித்த விளக்க கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச் செயலர் முரளிதர ராவ் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் மது, ஊழலுக்கு எதிரான பிரச்சாரம் எதிரொலிக்கும். அதனை முன்னிறுத்தி தான் பாஜகாவின் தேர்தல்பிரசாரம் இருக்கும்.
 
தமிழகத்தில் பாஜக தலைமையில் ஆட்சி அமைந்தால் பூரண மது விலக்கு கொண்டு வரப்படும். மதுவால் கிடைக்கும் வருமானத்தில் தான் திமுகவும், அதிமுகவும் தங்களது கட்சிகளை நடத்தி கொண்டிருக்கின்றன. பாமகவும், தேமுதி.,கவும் இப்போதும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கின்றன. மதிமுக பொதுச்செயலர் வைகோ மட்டும்தான் கூட்டணியில் இல்லை எனத்தெரிவித்து வெளியேறி விட்டார்.

பாரதிய ஜனதா கட்சியில் சமூக அக்கரைகொண்ட பலகட்சிகள் இணைய ஆர்வமாக உள்ளன.தமிழக மீனவர்களின் பல ஆண்டுகால பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண மாற்றுத்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என முரளிதர ராவ் தெரிவித்தார்.

Leave a Reply