தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மீனவர்தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என, மீனவ பிரதிநிதிகளின் கோரிக்கை கிடப்பில்கிடக்கும் நிலையில், இந்த ஆண்டு முதல் மீனவர் தின த்தை அரசு விழாவாக அறிவித்து கொண்டாட செய்தது மத்தியஅரசு. இதனால் பாஜக.,வுக்கு மீனவர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த 1998-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதியை மீனவர் தினமாக ஐக்கிய நாடுகள்சபை அறிவித்தது. இவ்விழாவை மத்திய, மாநில அரசுகள் அரசுவிழாவாக கொண்டாட வேண்டும் என மீனவ பிரதிநிதிகள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிவருகின்றனர். தமிழகத்தில் மீன் வளத்துறை மூலமாக இக்கோரிக்கை அரசுக்கு அனுப்பப்பட்டது.


பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு அமைந்ததும், மீனவ பிரதிநிதி களின் சார்பில் இதேகோரிக்கை வைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் மீனவர் தினத்தை அரசுவிழாவாக மத்திய அரசு கொண்டாடியது. இது மீனவர்கள் மத்தியில் நல்லவரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து மீனவர் சங்க பிரதிநிதி ஒருவர் கூறும் போது, “மத்தியில் மீனவர்களுக்கு தனி அமைச்சகம் இல்லை. வேளாண்மை துறையின் கீழ்தான் மீன்வளத்துறை உள்ளது. இருந்தும் மீனவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக அரசுவிழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் மீன் வளத் துறை தனி அமைச்சரின் கீழ் செயல்பட்டாலும் எங்களின் இந்தகோரிக்கை சட்டை செய்யப்படாமல் இருந்தது” என்றார்.

Leave a Reply