மத்திய அரசு வழங்கும் நிதி யை அஸ்ஸாமில் ஆளும் காங்கிரஸ் அரசு தவறாக பயன் படுத்துகிறது என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றம்சாட்டினார்.


 அந்த மாநிலத்தின் தீப்ருகர் என்ற இடத்தில் வெள்ளிக் கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:


 அஸ்ஸாம் மக்களாகிய நீங்கள் கடந்த 15 ஆண்டுகளாக தருண் கோகோயை ஆட்சியில் அமர்த்தி யுள்ளீர்கள். ஆனால், அவரால் அனைத்து கிராமங்களுக்கும் 24 மணிநேர மின்சாரம் கொடுக்க முடிந்ததா? தூய்மையான குடி நீர், சாமானிய மக்களுக்கான மருத்துவ வசதி ஆகியவை கிடைத்ததா?


 அஸ்ஸாம் அரசுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதிவருகிறது. ஆனால், அந்தப்பணத்துக்கு அஸ்ஸாம் அரசு கணக்கு காண்பிப்பதில்லை.


 பிற மாநிலங்களை விட அஸ்ஸாம் ஏன் பின்தங்கி யிருக்கிறது என மக்கள் உங்களை (கோகோய்) பார்த்து கேள்வி எழுப்புகின்றனர்.


 அஸ்ஸாமில் ஊழலற்ற அரசு அமைய வேண்டு மானால் பாஜகவுக்கு வாக்களியுங்கள். வறுமையை ஒழிக்கவும், வளர்ச்சியை ஏற்படுத்தவும் நாங்கள் பாடு படுவோம்.
 மேலும், அஸ்ஸாம் எல்லை வழியாக நடை பெறும் சட்டவிரோத ஊடுருவலை தடுத்து நிறுத்துவோம் என்றார் அமித் ஷா. இந்தக் கூட்டத்தில் 50,000 பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply