பிரதமர் மோடி வீட்டின் மீது வான் வழி தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் மற்றும் சிரியாவில் அந் நாட்டு அரசுகளுக்கு எதிராக போரிட்டுவரும் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள், அந்நாடுகளின் பலபகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கொண்டு வந்துள்ளனர். மேலும்,  லெபனான், எகிப்து, பிரான்ஸ் உள்பட பலநாடுகளிலும் பல்வேறு நாசவேலைகளை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் உள்ள 15 இடங்களில் ஐஎஸ்ஐஎஸ். தீவிரவாத அமைப்பு தாக்குதல்நடத்த சதிதிட்டம் தீட்டியிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

அதில், டெல்லி ரேஸ் கோர்ஸ் சாலையில் அமைந்துள்ள பிரதமர் வீட்டின் மீது வான்வழி தாக்குதல் நடத்தப் படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஜனாதிபதி, துணை ஜனாதிபதி , உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீடு, ராஜ பாதை, இந்தியா, கேட், சி.பி.ஐ., மத்திய தொழிற் பாதுகாப்புபடை, எல்லை பாதுகாப்பு படை தலைவர்கள் அலுவலகங்கள் ஆகியவை அமைந்துள்ள மத்தியஅரசு அலுவலக வளாகம் (சிஜிஓ வளாகம்) ஆகியவற்றின் மீதும் தாக்குதல் நடத்தப் படலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்த இடங்களில் யுஏஎஸ். என்னும் ஆளில்லா வான்தாக்குதல் அமைப்பு, ஆளில்லா விமானம், பாரா மோட்டார் ஆகியவற்றை கொண்டு தாக்குதல் நடத்தலாம் எனவும், எனவே, சந்தேகத்திற் கிடமாக ஏதேனும் விண்ணில் பறந்தால், அவற்றை இந்திய விமானப் படையின் ஆலோசனை பெற்று உடனே சுட்டுத் தள்ளுமாறு பாதுகாப்பு படைகளுக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.