ஏற்கனவே கோஷ்டிபூசலுக்கு பஞ்சமில்லாத காங்கிரஸ் தற்போது உச்சக்கட்ட கோஷ்டிபூசலில் சித்தி தவிக்கிறது. அந்தகட்சியின் தலைவர் இளங்கோவனுக்கும் மகிளா காங்கிரஸ் தலைவியான விஜய தரணி  எம்.எல்.ஏ.,வுக்கும் மிடையே வெடித்தசர்ச்சை தற்போது போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகாரளிக்கும்வரை சென்றிருக்கிறது.


தமிழக காங்கிரஸ் தலைவராக இளங் கோவன் பொறுப்பேற்ற பின்னர், காங்கிரஸ் கட்சியில் உள்கூத்து இன்னும் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே தங்கபாலு தலைமையில் ஒருகுழு, தேசிய தலைவர் சோனியாவிடம் சென்று இளங்கோவனை  மாற்றவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து,  தங்கபாலுபற்றி கடுமையாக விமர்சித்த இளங்கோவன், புலவரான தங்க பாலுவுக்கு இவ்வளவு சொத்து எப்படி சேர்ந்தது ? என்ற கேள்வியை எழுப்பினார். இதுதொடர்பாக பின்னர் தங்கபாலு பிரஸ்மீட் வைத்து, 'அனைத்தும் உழைத்துசேர்த்த சொத்து' என்று விளக்கமளித்தார். இந்த உள்கூத்து  முடிவடைந்த நிலையில், இப்போது விஜய தரணி எம்.எல்.ஏவுடன் ஏற்பட்ட சர்ச்சை இளங்கோவன் பதவிக்கு வேட்டுவைத்து விடும் என்றே கூறப்படுகிறது.

கடந்த 19ம் தேதி சென்னை சத்திய மூர்த்தி பவனில், இந்திரா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவுக்காக வைக்கப்பட்டிருந்த பேனரை இளங்கோவன் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து,  மகிளாகாங்கிரஸ் தலைவர் விஜய தரணி இளங்கேவனை சந்தித்து பேனரை கிழித்தவர்கள்மீத நடவடிக்கை எடுக்க வற்புறுத்தினார். அப்போது இருவருக் கிடையே வாக்குவதம் ஏற்பட்டதாகவும் இருவரும் ஒருவரை யொருவர் ஒருமையில் திட்டி கொண்டதாகவும் சொல்லப்பட்டது.

மேலும் விஜய தரணியை இளங்கோவன் அடிக்க பாய்ந்ததாகவும் போலீசில் புகார்கூறப்பட்டது. இது தொடர்பாக மகிளா காங்கிரஸ் துணைத்தலைவி, சாந்தா ஸ்ரீநி, மானசா ஆகியோர் அண்ணா சாலை போலீஸ் நிலையத்தில் இளங்கோவன் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரளித்து சிலமணி நேரத்துக்குள், மகிளா காங்கிரஸ் இன்னொரு துணைத்தலைவி, ஆலிஸ் மனோகரி, விஜய தரணி மீது போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், கடந்த 27ஆம் தேதி சத்தியமூர்த்தி பவனில் கட்சிப்பணிகளை பார்த்து கொண்டிருந்தபோது,  அங்குவந்த விஜயதரணி, 'கட்சி பதவி பெற்றபின் இவ்வளவு நாளாகிறது என்னைவந்து ஏன் பார்க்க வில்லையென்று கூறி  நீ உன் சாதி புத்தியை காட்டிவிட்டாயே? என்று  கடுமையாக திட்டினார். சாதிபெயரை ஏன் இழுக்குறீர்கள் என்று கேட்டதற்கு, என்னையா எதிர்த்து பேசுகிறாய்? என்று செருப்பால் அடிப்பேன், கொன்றுவிடுவேன் என்று மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும் விஜய தரணி உள்ளிட்ட 4 பேர்மீது எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை சட்டப் படி வழக்கு பதிய வேண்டுமென்றும் ஆலிஸ் மனோகரி வலியுறுத்தியுள்ளார்.

இது இப்படியிருக்க இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்ககோரி, விஜயதரணி எம்.எல்.ஏ காங்கிரஸ கட்சியின் தலைவர் சோனியாவுக்கும், ராகுல் காந்திக்கும் இமெயிலில் புகார்கடிதம் அனுப்பியுள்ளார், அதில் அவர் கூறியிருப்பதாவது.

கடந்த 19-ந் தேதி பெண்களுக்கு அதிகாரமளித்தல் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தநிகழ்ச்சிக்காக, இந்திரா காந்தி படத்துடன் வைக்கப்பட்ட பேனரை  ஈவிகேஎஸ். இளங்கோவனின் ஆதரவாளர்கள் கிழித்து எறிந்தனர்.பின்னர் அந்தபேனர் ஆண்கள் கழிவறையில் கிடந்தது.  இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது  உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம் கூறினேன். ஆனால் அவரோ என்னை தரக் குறைவாக திட்டி கட்சியைவிட்டு போகுமாறு கூறினார்.

இத்தோடு இளங்கோவன் என்னை திட்டுவது இது 3வது முறையாகும்.  கட்சியில் உள்ள பிறபெண்களையோ பலமுறை திட்டியிருக்கிறார்.பொறுமைக்கும் ஒரு எல்லைஉண்டு.பெண்களுக்கு தொல்லைகொடுப்பது அவருக்கு  வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.