அரசியலில் இருந்து ஓய்வுபெற திட்டமிட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பாதுகாப்புதுறை அமைச்சர் மனோகர் பாரிக்கர்  மறுத்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவுகளில் கூறப்பட்டிருப்பதாவது:  எனது கருத்துகள், தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது  திரித்து கூறப்பட்டுள்ளன. அரசியலில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து நான் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

 பொதுவாக, யாரும் தங்களுக்கு 60 வயதானதும் ஓய்வுபெற வேண்டும் என்று நினைப்பார்கள். அது போலத்தான் நானும்.

 ஆனால், மத்திய அரசில் பிரதமர் நரேந்திர மோடியால் எனக்கு மிகப் பெரிய பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. அந்த பொறுப்புகளை நிறைவுசெய்ததும், கோவா அரசியலுக்கு திரும்புவேன் என்று சுட்டுரைப் பதிவுகளில் மனேகர் பாரிக்கர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply