தனி நபருக்கு தீங்கு விளை விப்பது, சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் நம் அனவருக்கும்  வைக்கப்படும் கரும்புள்ளி’’ ‘‘நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டுசெல்ல ஒற்றுமை, நல்லிணக்கம் போன்றவை தான் ஒரே வழி’’

‘‘பாகிஸ்தானுக்கு போ’’, என ஒருசிலர் முரண்பட்ட கருத்து தெரிவிப்பதால், நாட்டிலுள்ள 125 கோடி மக்களின் தேச பக்தி பற்றி யாரும் கேள்வி எழுப்பமுடியாது. இதற்காக யாரும் சான்றளிக்க வேண்டிய அவசியமும் இல்லை . ஒற்றுமை, நல்லிணக்கம் என்பது இந்தியாவின் பாரம் பரியம். அதை நாம் தொடர்வதோடு ஒற்றுமையை மேலும் வலுவாக்க வேண்டும்.

இந்தியா போன்ற பன்முகத் தன்மை கொண்ட நாட்டில், ஒருமைப் பாடின்மை பற்றி பல சாக்குகள் கூறலாம். தேசம் ஒற்றுமையாக விளங்கு வதற்கான வழிகளை கண்டறியவேண்டும். மக்களிடையே சமஉரிமை, கருணை நிலவவேண்டும். நம்மிடம் உள்ள சக்தி தான், மற்றவர்களிடமும் உள்ளது என்பதை அனைவரும் உணரவேண்டும்.

முக்கிய மசோதாக்கள் நிறைவேற வேண்டி, எதிர்க் கட்சிகளுக்கும் மதிப்பு கொடுத்து சமரச அணுகு முறையை எல்லா விஷயங்களிலும் அரசு கடை பிடித்து வருகிறது. தேசத்தின் நலனுக்காக இவ்வாறு அணுகு முறை கடைபிடிப்பதை இடித்துரைக்கும் முயற்சிகள் தேவையற்றது. மூத்த உறுப்பினர்கள் அடங்கிய மாநிலங்களவைக்கு நான் அதிகமுக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

மசோதாக்கள் நிறைவேற, மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை மிகவும் இன்றியமையாதது. மக்களவை, மாநிலங்களவை என இருஅவைகளும் ஒன்று பட்டு கூட்டாக செயல்பட வேண்டும். இதை ஜவஹர்லால் நேருவும் சுட்டிக் காட்டி உள்ளார். அவை நடவடிக்கைகளை, இந்த நாடு உற்று நோக்கி கொண்டிருக்கிறது. எந்த ஒரு தனிநபருக்கும் தீங்கு நேருகிறது என்றால், அது நம் அனைவருக்கும், சமுதாயத்திற்கும், தேசத்திற்கும் விழுந்த கரும்புள்ளி ஆகும். அதன் வேதனையை நாம் அனுபவித்து தான் தீர வேண்டும். மீண்டும் இதுபோல் நிகழாமல் உறுதிசெய்ய வேண்டும். நாட்டில் நிகழும் எல்லா சம்பவங்களையும் அரசியலாக்கும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

நமது முன்னோர் விட்டுச்சென்ற பாவங்களை, தவம்செய்து போக்கி, சமூக நீதியை நிலைநாட்ட, புதிய தலைமுறை தயாராகவேண்டும். நமது அரசியலமைப்பு ஒருசட்டம் மட்டும் அல்ல. அது சமூக ஆவணமாகவும் உள்ளது. அதை நாம் மதிக்கவேண்டும்.

சகிப்பின்மை பற்றி நடைபெற்ற விவாதங்களுக்கு பதில் அளித்து பிரதமர் மோடி மாநிலங்களவையில்  நேற்று பேசியது

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.