பாராளுமன்றத்தில் சரக்கு ,சேவை வரி மசோதா (ஜி.எஸ்.டி)உள்பட முக்கிய சீரமைப்பு நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.இருப்பினும் சகிப்பின்மை நாட்டில் அதிகரித்து வருவதாகவும் சர்ச்சசைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மத்திய அமைச்சர்கள் குறித்தும் பாஜக கடும்விமர்சனத்தை பாராளுமன்றத்தில் எதிர் கொண்டது.

பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு கடமை குறித்த விவாதம் நேற்று நடந்தது.பாராளுமன்றத்தில் சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை நிறைவேற்றுவதில் உள்ள தடைகளை நீக்க காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.,கூட்டணி கொண்டுவந்த மசோதா கோப்புகள் விவரம் குறித்தும் ஜி.எஸ்.டி மசோதாவில் உள்ள 3 ஆட்சேபனைகளுக்கு தீர்வுகாணும் வகையிலும் மத்திய அரசு சில மாற்றங்களுடன் பாராளுமன்றத்திற்கு வந்தது.

உதாரணமாக  குறை தீர்ப்பு நடைமுறையை ஏற்படுத்தி அதில் ஓய்வு பெற்ற நீதிபதிகளை பதவி யமர்த்த வேண்டும். இதன் மூலம் மாநிலங்கள் மற்றும் மத்திய அரசுவரி வருவாய்களை பகிரிந்துகொள்வதில் உள்ள பிரச்சினைக்கு  தீர்வுகாண வேண்டும் என காங்கிரஸ் கருத்து தெரிவித்து இருந்தது. ஜி.எஸ்.டி கவுன்சிலை அமைத்து பிரச்சனைகளுக்கு தீர்வுகாணும் நடை முறை மேற்கொள்ள வேண்டும் என்று  கூறப்பட்டது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைச்சர் கொண்டு வந்த இந்த குறிப்புகள் குறித்து விவாதிப்போம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது.மேலும் ஒரு சதவீத செஸ்வரியை உற்பத்தி மாநிலங்களில் விதிக்க வேண்டும். இதனைத்தவிர வரி விகிதம் 18 சதவீதத்திற்கு மேலாக செல்லக்கூடாது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  அமெரிக்காவில் இருந்து திரும்பியதும்  விவாதிப்பதற்கு மத்திய அரசு காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது .

இந்த பேச்சு வார்த் தையில் பாராளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு மற்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு சார்பில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.இந்த பேச்சு வார்த்தையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, குலாம் நபி ஆசாத் ஆனந்த் சர்மா மற்றும் ஜோதிர் சிந்தியா ஆதித்யா ஆகியோர் உள்ளனர்.

பிரதமர் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா இடையே நடந்த சந்திப்பு நாடு முழுவதும் வரவேற்கப்பட்டுள்ளது.  கூட்டுறவு ஜனநாயகத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்று வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.முரண்பட்ட அரசியலை மக்கள் விரும்ப வில்லை.சட்டம் நிறைவேறுவதற்கு அரசால்  எந்தஒரு நல்ல பணி மேற்கொள்ளப்பட்டாலும் அதன்பெருமை ஆட்சியாளர்களுக்கும் எதிர் கட்சியினயரையுமே சேரும் என்று வெங்கய்யா நாயுடு மேலும்தெரிவித்தார்.அவர் ஜிஎஸ்டி மசோதா குறித்து இவ்வாறு கூறினார்.

இந்த நிலையில் பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியை கவுபாய் அரசியலமைப்பை மேற் கொள்வதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஓ பிரையன்  குற்றம் சாட்டினார். சுதந்திர போராட்ட பங்கேற்பு குறித்து  இடதுசாரிகளுக்கு கேள்வி  கேட்கும் உரிமை இல்லை என்றார். அப்போது பிரையனுக்கும் இடது சாரி எம்பி.,க்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.  ஜி.எஸ்.டி மசோதா, இன்சூரன்ஸ் மசோதா(அன்னிய நேரடி முதலீட்டை 26சதவீதம் முதல் 49சதவீதம் வரை அதிகரித்தல்) ஆகியவற்றை நாங்கள் ஆதரிக்கிறோம்.

நிலக்கரி மற்றும் சுரங்க மசோதா க்களிலும் முழுமையாக ஆதரிக்கிறோம். ஆனால் நீங்கள் 5-6 அமைச்சர்களை  அரசியலமைப்புக்கு ஒத்துழைப்பு அளிக்க கூறவேண்டும் என தியாகி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.