சென்னை வெள்ளசேதம் குறித்து மத்திய மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.வட கிழக்கு பருவமழையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும்  வரலாறுகாணாத இழப்பை சந்தித்துள்ளது. தமிழக வெள்ள நிலை குறித்து பிரதமர் கடந்த ஞாயிற்றுக் கிழமை தனது ‘மான் கி பாத்’ ரேடியோ உரையில் குறிப்பிட்டபருவம் தவறிய மழையால் தமிழகமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருந்து அவர்களை மீட்க மத்திய அரசு உதவும் என குறிப்பிட்டார்.

இந்நிலையல் மீண்டும் கொட்டிய மழையால் சென்னை வெள்ளத்தில் மிதப்பதை அறிந்த பிரதமர் அமெரிக்க சுற்றுப் பயணத்தை முடித்து கொண்டு டெல்லிதிரும்பியதும் முதல்–அமைச்சர் ஜெயலலி தாவுடன் பேசி நிலைமைகளை கேட்டு தெரிந்துகொண்டார்.

இதை தொடர்ந்து இன்றுகாலை பிரதமர் மோடி தனது இல்லத்தில் மூத்த மத்திய அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் தமிழக வெள்ளபாதிப்புக்கு உடனடியாக தேவைப்படும் நிவாரண உதவிகள் மற்றும் நிரந்தர நிவாரண உதவிகள் குறித்து ஆலோசிக்கப் பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply