மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மக்களை மீட்ப தற்காக மேலும் 600 தேசிய பேரிடர் மீட்புபடையினர் சென்னை வரவுள்ளனர். கனமழையால் சென்னை விமானம் மூடப் பட்டுள்ளது. இதனால் விமான சேவை பெரிதும் பாதிப்புக்குள்ளாகி யுள்ளது. இந்நிலையில், டெல்லி மற்றும் புவனேஸ்வர் ஆகிய இடங்களிலிருந்து தேசியபேரிடர் மீட்பு படையினர் விமானம் மூலம் சென்னை அருகேயுள்ள அரக்கோணம் விமானப்படைக்கு சொந்தமான விமான நிலையத்துக்கு வந்தடைகின்றனர்.

பின்னர் அங்கிருந்து குழுக்களாக பிரிந்துசெல்லும் அவர்கள், உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபடுவார்கள். மழை, வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை பத்திரமாக மீட்பதற்கு 40 காற்றடைத்த படகுகள் மற்றும் உணவுப் பொருள்களையும் எடுத்து வருகின்றனர்.

Leave a Reply