சென்னையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பற்றி கருத்துதெரிவித்த நடிகர் கமலஹாசன், வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம் பணம்கேட்கிறது அரசு. இது வரை மக்கள் செலுத்திய வரிப் பணம் எங்கே போனது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

 வழக்கமாக எதையும் நாசுக் காகவும், மறை முகமாகவும் கருத்துதெரிவிக்கும் நடிகர் கமல ஹாசன் கன மழை காரணமாக சென்னையில் பொதுமக்கள் பாதிக்கப் பட்டுள்ளதை பார்த்து கோபமாகவே கருத்து தெரிவித்துள்ளார்.
 
ஆங்கில இணைய தளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கமல் கூறும்போது “இந்தசேதத்தை, இயற்கை பேரிடர் என்று கூறுவது மிகவும் குறைவானவார்த்தை.
 
மக்கள் செலுத்திய வரிப்பணம் அனைத்துக்கும் எங்குசென்றது? நான் கருப்புபணம் வைத்திருக்க வில்லை. நான் ஒழுங்காக அனைத்து வரிகளையும் செலுத்திவருகிறேன். எனக்கு அரசு நிர்வாகம்செய்தது என்ன? எனது சக மக்களுக்கு செய்தது என்ன?
 
சென்னைக்கே இந்நிலைமை எனில், தமிழகத்தின் பிறபகுதிகளின் நிலைமையை நீங்கள் கற்பனை செய்துபாருங்கள். ஏழைகளும், மத்திய வர்க்கத்தினரும் கடுமையான அச்சத்திலுள்ளனர்.
 
நான் பெரியபணக்காரன் கிடையாது. ஆயினும், எனது ஜன்னலை திறந்து பார்க்கும் போது, மக்கள் படும் கஷ்டத்தை பார்த்து வெட்கப் படுகிறேன். சென்னையில் ஒட்டு மொத்த, நிர்வாகமும் உருகுலைந்து கிடக்கிறது. மீண்டும் சென்னை இயல்புவாழ்க்கைக்கு திரும்ப இன்னும் பலமாதங்கள் தேவைப்படும்.
 
ஆளும் அரசாங்கங்கள், அது எந்தகட்சியுடையதாக இருந்தாலும், ஒரு கார்பரேட் திட்டத்திற்கு ரூ.4000 கோடியை செலவிடமுடிகிறது. இந்நாட்டில் 120 கோடி மக்கள் இருக்கிறோம். அந்த 4000 கோடியை எங்கள் மத்தியில் வினியோகித்திருந்தால், எத்தனையோ இந்தியர்கள் கோடீஸ்வரர்களாக மாறியிருக்க முடியும்.
 
நான் முற்றிலுமாக கவலையில் ஆழ்ந்து ள்ளேன். நான் வசதியான ஒருவீட்டில் உட்கார்ந் திருப்பதற்காக வெட்கப்படுகிறேன். அரசுடன் ஒப்பிட்டால் எனது வருமானம் மிகவும் சொற்பம். ஆனால், அரசோ, வெள்ள நிவாரணத்திற்கு மக்களிடம்தான் பணம்கேட்கிறது. பிறகு அரசு என்னதான் செய்யும்? இருப்பினும், நான் பணம் கொடுக்கவே செய்வேன். ஏனெனில், அரசு நிர்வாகத்தை நான் மதிக்கிறேன்.  
 
நான் பணக் காரன் என்று நினைத்துக் கொண்டு பணம் கொடுக்கப் போவதில்லை. நான் எனது மக்களை நேசிக்கிறேன். பணக் காரன், ஏழை என நன்கொடைக்காக இப்போது பேசப்படும் அனைத்துமே நாடகம் தான். அரசியல்வாதிகள் பதவியில் இருக்கும் வரை சமூக ஏற்றத்தாழ்வை நீக்குவோம் என்றுதான் பேசிக்கொண்டிருக்க போகிறார்கள்" என்று கமல் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.