கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிவரும் பலத்த மழையால் கெடிலம் ஆற்றின் கரை உடைந்ததால் கடலூர் நகரமே வெள்ளத்தில் மிதந்துவருகிறது. தனித் தீவாக மாறிய கடலூர் மாவட்டத்தை கண்டுகொள்ள ஆள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் தவித்துவருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு முதல்நாள் அதாவது நவம்பர் 8ம்தேதி பெய்த கனமழையால் கடலூர் மாவட்டமே வெள்ளக் கடாக மாறியது. மாவட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் மேற்கொள்ளப் பட்டு இயல்பு வாழ்க்கை திரும்பிவந்த நிலையில் கடந்த 3 நாட்ளாக கடலூர் மாவட்டத்தில் மீண்டும் கொட்டிய கனமழையால் மீண்டும் வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காட்சி அளிக்கிறது.

கடலூர் நகரில் அனைத்து தெருக்களிலும் 2 அடி உயரத்துக்கு தண்ணீர்தேங்கி உள்ளது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பெரிதும் பாதிக்கப் படுகின்றது. பலர் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமல் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர். கரை புரண்ட வெள்ளம் கடலூர் நகரில் பெரும் பாலான கடைகள் மூடியே கிடக்கிறது. கடந்த 3 நாட்களாக பெய்த பலத்தமழையால் கெடிலம் ஆறு, தென் பெண்ணையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கரையோர கிராம மக்கள் வெளியேற்றபட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மழையால் பாதிப்புக் குள்ளானவர்களை மீட்டு தங்கவைக்க 100க்கும் மேற்பட்ட முகாம்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. இந்தமுகாம்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு மற்றும் மருத்துவ வசதிகள் செய்யப் பட்டுள்ளன.

 தொடர் மழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வழி கின்றன. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஏரிகள் உடையாமல் தடுக்க ஏரிகளைசுற்றி மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளம் தற்போது 3 வது முறையாக மீண்டும் பலத்த மழை பெய்துவருகிறது. கெடிலம் ஆற்றில் 30 ஆயிரம் கன அடி தண்ணீர் சீறிபாய்வதால் கெடிலம் ஆற்றின் கரைகள் உடைந்து. 50க்கும் மேற்பட்ட நகர்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.