மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் வரும் 11 ஆம் தேதி வரை தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொட்டி தீர்த்த மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள சேதத்தை விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார் , அப்போது சுங்கச் சாவடிகளில் அதிக வண்டிகள் நிற்ப்பதை கண்டவர் சுங்க கட்டணத்தை சில நாட்களுக்கு தவிர்க்கும்படி கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தில் வரும் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்து மத்திய தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய, மாநில அரசு முகமைகள் நிவாரணப் பொருள்களை விரைவாக கொண்டு செல்லும் வரையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்றும் கூறியுள்ளது.

சென்னை மக்களுக்கு உதவுவதற்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஒரு வாரத்திற்கு இலவச சேவை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply