தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்  கூறியுள்ளதாவது:–

சென்னையில் உள்ள அனகாபுதூர் பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்தார். அவரை மனிதாபிமான அடிப்படையில் மீட்டு அருகில்உள்ள ஒரு மருத்துவ மனையில் சேர்த்துவிட்டு வருவதற்கு தாமதமாகி விட்டது. எனவே பிரதமரை வரவேற்க என்னால் தகுந்தநேரத்தில் வரமுடிய வில்லை.

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரலாறுகாணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. இதனால் அந்த பகுதிகளில் மழைவெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகை தந்துள்ளார். மேலும் அவர் தமிழகத்திற்கு வெள்ள நிவாரண உதவியாக ரூ.1000 கோடி வழங்கி அறிவித்துள்ளார். இது வரவேற்கதக்க ஒன்றாகும்.

வெள்ள நிவாரணமீட்பு பணியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் முழுமுயற்சியுடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதி வழங்க முன்வர வேண்டும்.

தமிழகத்திற்கு கர்நாடகா, ஆந்திரா, மும்பை உள்ளிட்ட அண்டை மாநிலங்கள் வெள்ளநிவாரண நிதி வழங்க முன்வந்துள்ளன. இது ஆரோக்கியமான அரசியலை காட்டுகிறது. சினிமா நடிகர்கள், நடிகர் சங்கத்தினர் வெள்ளநிவாரண நிதி உதவிகளை செய்துவருகின்றனர். அவர்கள் வழங்கும் நிதியின் அளவை பார்க்காமல், அதில் இருக்கும் அன்பை பார்க்கவேண்டும்.

வெள்ளமீட்பு பணியில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கட்சி பாகுபாடின்றி மக்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply