டெல்லியில், ஒரு ஆங்கில பத்திரிகை சார்பில் நேற்று நடை பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திரமோடி கலந்துகொண்டார். பாராளுமன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, அந்நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், நடப்பு குளிர் கால கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை நகைச் சுவையாக குறிப்பிட்டார்.

அவர் தனதுபேச்சை முடிப்பதற்கு முன்பு, ‘நான் பாராளுமன்றத்துக்கு செல்ல வேண்டி யுள்ளது. பாராளுமன்றம் இயங்குவதே பெரியவிஷயம். ஆனால் அதற்கான பெருமை, மோடியை அல்ல, அனைத்து கட்சிகளையுமே சாரும்’ என அவர் கூறினார்.

நகைச்சுவை ததும்பிய அவரது பேச்சைக்கேட்டு, அங்கு வந்திருந்த பல்வேறு துறை பிரபலங்கள் சிரித்துமகிழ்ந்தனர். பிரதமர் மோடி, 35 நிமிடங்கள் பேசினார். அவர் இன்னும் பேச மாட்டாரா என்று பார்வையாளர்கள் ஏக்கத்துடன் கேட்கும் அளவுக்கு அவரதுபேச்சு, அனைவரையும் கவர்ந்தது.

Leave a Reply