மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக வெள்ள சேதங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி யிடம் நேரடியாக விளக்கினார்.

மேலும் அவர் சென்னை வந்தபோது பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து பேசினார். இதையடுத்து தனது துறைசார்பில் நிவாரண பணிகளை பொன்.ராதாகிருஷ்ணன் முடுக்கிவிட்டுள்ளார்.

டெல்லியில் இருந்து உயர்அதிகாரிகள் குழுவுடன் நேற்று காலை பெங்களூர் சென்றார். பின்னர் அங்கிருந்து காரில் சென்னை புறப்பட்டார்.

இது பற்றி பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–

மத்திய சாலை போக்கு வரத்து முதன்மை பொதுமேலாளர் ரெட்டி மற்றும் உயர் அதிகாரிகள் கொண்டகுழு என்னோடு வந்துள்ளது. நாங்கள் பெங்களூரில் இருந்து சென்னை வரையிலான சாலைபாதிப்புகளை இன்று பார்வையிடுகிறோம்.

நாளை சென்னை மற்றும் கடலூர் பகுதிகளிலும், நாளை மறு நாள் தென் மாவட்டங்களிலும் நேரில்சென்று சாலை பாதிப்புகளை பார்வையிடுவதோடு, இதுபோன்ற காலங்களில் சாலைகள் சேதமடையாமல் தடுப்பது குறித்தும் ஆய்வு செய்கிறோம்.

சேதமடைந்த நெடுஞ்சாலைகளை உடனடியாக சீரமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

எனது சார்பில் மழைபாதித்த பகுதிகளில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 10 டன் அரிசி மற்றும் 1 டன் பால்பவுடர் ஆகியவை வழங்கியுள்ளேன். இந்த பொருட்கள் வினியோகம் நாளை தொடங்கும் என்று  அவர் கூறினார்.

Leave a Reply