அயோத்தியில் ராமர்கோயில் கட்டுவது தொடர்பாக மோகன் பகவத் எடுத்துள்ள நிலைப்பாடு வரவேற்புகுரியது. தற்போது, ராமர்கோயில் கட்டும் பணியை தொடங்கும் தேதியையும் அவர் அறிவிக்கவேண்டும் என சிவசேனா வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து சிவசேனா சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:-  ராமர்கோயில் தொடர்பாக பலர் ரத்தம்சிந்திய நிலையிலும் அங்கு ஒரு கோயிலை கட்டஇயலாமல் போனால், இதற்காக தங்களது உயிரை தியாகம்செய்த நூற்றுக்கணக்கானவர்களின் உயிர்தியாகத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டும்தைரியம் பிரதமர் மோடிக்கு உண்டு. இந்த விவகாரத்தை அவர் கையில் எடுத்தால் அவரதுசெல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிறுபான்மை யினருக்கு மட்டுமே ஆதரவான அரசு என்ற எண்ணத்தை மாற்ற ராமர் கோயிலை மத்திய அரசு கட்டவேண்டியது அவசியமாகும்.

இப்போது இல்லை என்றால் எப்போதுமே அயோத்தியில் ராமர் கோவிலை கட்ட முடியாது” என்று அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது. முன்னதாக தனது வாழ்நாளுக்குள் அயோத்தியில் ராமர்கோவில் கட்ட விரும்புவதாக ஆர்.எஸ். எஸ் தலைவர் மோகன்பகவத் கூறியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply