சென்னையில் தொடர்ந்துபெய்த மழையில் சிக்கி தவிப்போரை காப்பாற்றி மீட்டுவரும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் .சென்னையில் பெய்தமழையில் பல குடியிருப்புகள் மூழ்கின. இதில் பல வீடுகளில் சிக்கியவர்கள் வெளியேற முடியாமல் தவித்துவருகின்றனர். குடியிருப்பு பகுதியில் தண்ணீரில் மிதக்கும் பிணங்கள் மீட்கப்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப் பட்டது .

 

அடையாறு ஒட்டிய கோட்டூர்புரம் கடும்பாதிப்பை சந்தித்துள்ளது. இங்கு தேசியபேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு பிரிவு தலைவர் ஓ.பி.சிங் நிருபர்களிடம் கூறுகையில் : தற்போது மீட்புபணியில் 50 குழுக்கள் ஈடுபட்டுள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவுபொட்டலம் வழங்கி வருகிறோம். மேலும், அவர்களை காப்பாற்றுவதே எங்களின் முதல்பணி , அரசு கேட்டுகொண்டால் மேலும் குழுக்களை அனுப்ப தயாராக இருக்கிறோம் என்றார்.

மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 100 டன் நிவாரண பொருட்களுடன் 2 கடற்படை கப்பல்கள் நேற்று சென்னை சென்று சேர்ந்தன.

கப்பற்படை சார்பில் INS சக்தி, INS ஷயாத்ரி ஆகிய இரு கப்பல்கள் நேற்று விசாகப் பட்டினத்தில் இருந்து 100 டன் நிவாரணப் பொருட்களுடன் நேற்று சென்னை சென்றடைந்தன.

INS ஐராவத் என்ற கப்பல் நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு ஏற்கனவே சென்னை வந்தடைந்துள்ளது. இந்நிலையில், மேலும் இருகப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் 100 டன் . அரிசி, கோதுமை, பால் பவுடர், டவல், போர்வை, மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதைத் தவிர, 5 லட்சம் லிட்டர் குடிநீரும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும், மீட்புபணியை மேற்கொள்ள ஒரு ஹெலிகாப்டரும், 15 இயந்திரப் படகுகளும் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

150 கப்பற்படை வீரர்களும் சென்னை வந்துள்ளனர். அத்துடன் 80 நீச்சல்வீரர்கள், 3 மருத்துவர்கள், 8 மருத்துவ உதவியாளர்களும் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். நிவாரணப் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.