பிரதமர் நரேந்திரமோடி அடுத்த ஆண்டு பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்வார் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஆசியாவின் இதயம் என்றபெயரில் ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக பாகிஸ்தானில் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள சென்ற சுஷ்மா சுவராஜ், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்ஷெரீப்பை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதனை தொடர்ந்து ஈரான், கிர்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்களையும் சந்தித்து பேசினார்.

இதனிடையே பாகிஸ்தானில் அடுத்தாண்டு நடைபெறும் சார்க் உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பார் என இஸ்லாமாபாத்தில் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

Leave a Reply