நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் ஆகியோர், நாட்டில் சகிப்பற்ற தன்மை நிலவுவதாக கருத்துதெரிவித்து இந்தியாவின் மதிப்பை  களங்கப்படுத்தி விட்டனர். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக் காலத்துக்குள் ராமர் கோயில் கட்டப்படும் என்று விஸ்வ இந்துபரிஷத் தலைவர்களில் ஒருவரான  சாத்வி தெரிவித்துள்ளார். ஜார்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரில் விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களில் ஒருவரான சாத்வி பிராச்சி நிருபர்களுக்கு பேட்டி  அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

 நடிகர் ஷாரூக்கான், அமீர் கான் ஆகியோர் சகிப்பற்ற தன்மை குறித்து கருத்து தெரிவித்து நாட்டின் மதிப்பை களங்கப்படுத்தி விட்டனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் இணைந்து அவர்கள் இதனை கூறியுள்ளனர். இந்துக்கள் ஒரு போதும் எந்த இடத்திலும் கலவரத்தை உருவாக்க மாட்டார்கள். ஆனால் சிலர் வேண்டுமென்றே பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சி விருந்துவழங்குவது போன்று நடவடிக்கையில் ஈடுபட்டால் அதை  பொறுத்துக்கொள்ள மாட்டார்கள்.

உத்தரப்பிரதேச அரசு எதற்காக தாத்ரி வழக்கை சிபிஐக்கு பரிந்துரை செய்ய தயக்கம்காட்டுகிறது? சிபிஐ விசாரித்தால் உண்மை வெளியேதெரியவரும்.  பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சி காலத்திலேயே அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply