பீகார் மாநிலத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி அறிவித்த ரூ.1.25 லட்சம் கோடியிலான நிதி திட்டத்துக்கு, அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் முதல் முறையாக வரவேற்பு தெரிவித்துள்ளார். பீகார் சட்டப் பேரவை முதல் கூட்டத்தில் கவர்னர் உரைக்கு நன்றிதெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்துவருகிறது.

இதில் முதல்வர் நிதிஷ் குமார் நேற்று பேசுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடி, பீகார் மாநிலத்துக்கு அறிவித்தரூ.1.25 லட்சம்கோடி நிதி திட்டத்தை மனதார நான் வரவேற்கிறேன். ஆனால், இத் திட்டம் முறைப்படி நிறைவேற்றப்பட வேண்டும்’’ என்றார்.

Leave a Reply