அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்ற காங்கிரஸின் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்துதெரிவித்த நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நீதி மன்றத்தை காங்கிரஸ் அச்சுறுத்த முயல்கிறது என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

நாடாளுமன்றத்தை முடக்குவது ஜனநாயகத்துக்கு ஆபத்து. அரசியல் பழி வாங்கல் என ராகுல் கூறுகிறார். இவ்வழக்கு காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக்காலத்தில் தொடரப்பட்டது என்பதால் அவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கிப்பேசுவாரா? நீதிமன்றம் சம்மன் அனுப்பியதில், நாடாளுமன்றத்தின் தலையீடு என்ன இருக்கிறது. அது நாடாளுமன்றத்தின் வேலையா. நீதிமன்றம் செயல்படக் கூடாது என நீங்கள் விரும்புகிறீர்கள்.

நீதிமன்றத்தை அச்சுறுத்த விரும்புகிறீர்கள். எங்களுக்கு சம்மன் அனுப்பும்தைரியம் எப்படி வந்தது என நீதிமன்றத்தை பார்த்து கேட்கிறீர்கள். நாடாளுமன்றத்தை முடக்குவதன் மூலம் வளர்ச்சியை தடுத்து மக்களவை தேர்தல்தோல்விக்காக, மக்களை காங்கிரஸ் பழிவாங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply