தமிழகம் மழையின் தவிப்பிலிருந்தும் தத்தளிப்பிலிருந்தும் சற்றே மீண்டு வருகிறது.  பலபேர்களின் உதவியால் தலைநகரம் மீண்டும் தலைநிமிர்ந்து நிற்க தொடங்கியிருக்கிறது.  ஆனால் மக்கள் இழப்பிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வருவதற்கு மாதங்கள் பல ஆகலாம்.


    பிரதமர் அவர்கள் தமிழகத்தில் அறிக்கை தாக்கல் செய்த சில மணி நேரங்களுக்குள் ரூ 940 கோடி அறிவித்தது, பின்னர் பிரதமர் தமிழகம் வந்து வெள்ள சேதத்தை நேரில் பார்வையிட்டு உடனே ரூ 1000 கோடி அறிவித்த பின்னரே டில்லி திரும்பினார்.  ராணுவம், மத்திய மீட்புப்படை இன்று கூட மீட்புப்பணிகளில் ஈடுபட்டது மட்டுமல்லாமல் மருத்துவ முகாம்களை அமைத்து வருகிறார்கள்.

மத்திய சுகாதார துறை அமைச்சர் திரு. நட்டா அவர்கள் வெள்ளம் வடிந்த பின் தொற்று நோய் ஏற்படாமல் இருக்க மத்திய மருத்துவ குழுவை விரைந்து அனுப்பியிருக்கிறார்கள்.  மத்திய வெளியிறவுத்துறை அமைச்சர்   திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள் வெள்ளத்தில் இழந்த பாஸ்போர்ட்டுகக்கள,; விண்ணப்பித்த உடனேயே திரும்பவும் சிறப்பு கவனம் செலுத்தி கொடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார். 

மத்திய மின்துறை அமைச்சர் திரு. பீயூஸ் கோயல் அவர்கள் 50,000  நியான் விளக்குகள் வழங்க ஏற்பாடு செய்தது மட்டுமல்லாமல் இருளில் மூழ்கியிருக்கும் சென்னை வெளிச்சம் பெற மூன்று மத்திய மின்தடங்களை இணைத்து விட்டிருக்கிறார்கள்.  

மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் திரு. ரவிசங்கர் பிரசாத் அவர்கள் BSNL இணைப்புகள் கட்டணமில்லாமல் இயங்கும் என்று கூறியுள்ளார்.  மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சர் திரு. நிதின்கட்கரி அவர்களும், இணை அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களும் டிசம்பர் 11 வரை வுழடட கட்டணம் வசூலிக்கப்படாது என்று அறிவித்துள்ளது மட்டுமல்லாமல்,  பழுதுபட்ட நெடுஞ்சாலைகள் அவசர நடவடிக்கையின் மூலம் சீர் செய்யப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள.;  


மத்திய நகர்புற மேம்பாட்டு அமைச்சர் திரு. வெங்கையா நாயுடு அவர்கள் சென்னை நகரில் மறுசீரமைப்பில் மத்திய நகர்புற மேம்பாட்டுத்துறை உறுதுணையாக நிற்கும் என்று சொல்லியிருக்கிறார்கள்.  மத்திய நிதி அமைச்சர் திரு. அருண் ஜெட்லி அவர்கள் ஞாயிற்றுக்கிழமையும் வங்கிகள் இயங்க வேண்டும மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு நடமாடும் யுவுஆ கள் செயல்பட வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

வெள்ளத்தால் உயிரிழந்த மக்களுக்கு, ரூ 2 லட்சம் காயம் அடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் நிவாரண உதவி வழங்க பாரத பிரதமர் உத்திரவிட்டுள்ளார்.    இப்படி மத்திய அரசில் பிரதமர் உட்பட அனைத்து அமைச்சர்களுக்கும், தமிழகத்தின் பால் தங்கள் அன்பையும், அக்கறையையும் செலுத்தியிருக்கிறார்கள்.
    

தமிழக முதல்வர் பல்வேறு நிவாரணத்தொகை அறிவித்துள்ளார்கள்.  இதில் நிவராணத்தொகை வங்கிக்கணக்கில் செலுத்த வேண்டும் என்ற ஆரோக்கியமான வழிமுறையை ஏற்படுத்த வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன்படி நிவாரணத்தொகை போதுமா போதாதா என்ற விவாதம் ஒருபுறம் இருக்க இன்னும் அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் அதே நேரம் வங்கிக்கணக்கில் செலுத்துவது ஆரோக்கியமான முடிவாக இருக்கிறது.

   சென்னையை மறுசீரமைக்கும் பணியில் முதல்வர் தனிகவனம் செலுத்த மிக மோசமாக பாதிக்கப்பட்;ட மக்கள் குடிசைவாசிகள் என்ற காரணத்தால் குடிசைகள் இல்லாத சென்னையை உருவாக்கும் பெரும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.  அதே போல் வசதிபடைத்தவர்கள் வாழும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் ஆக்கிரமிப்புகள் என்ற வகையில், ஆக்கிரமிப்பவர்கள் உடனே கண்டறியப்பட்டு தடுக்கப்பட வேண்டும் என்பது மட்டுமல்ல ஆக்கிரமிப்பாளர்கள் யாராக இருந்தாலும் சட்டத்திற்கு முன் கொண்டு வந்து தண்டிக்கப்பட வேண்டும்.


    எந்தத்துறையை சார்ந்தவர்களாக இருந்தாலும் இழந்த மக்களுக்கு அவர்கள் வாழ்வை மீட்டெடுக்க உதவ வேண்டும்.  உதாரணத்திற்கு மருத்துவர்கள் மருத்துவ சேவை, பொறியாளர்கள் பழுதடைந்த வீடுகளை சரி செய்வதில் அதிக சலுகைகள் கொடுக்கலாம்.  வங்கியாளர்கள் வட்டி தள்ளுபடி செய்யலாம்.  எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் விற்பனையார்கள்    டிவி, ஃபிரிட்ஜ், மிக்ஸி போன்ற வீட்டு உபயோகப் பொருட்களுக்கு அதிக லாபமில்லா விற்பனை அளிக்கலாம்.  புதிய தவணை முறைகளை அறிவிக்கலாம்.  ஏனென்றால் நடுத்தர மக்கள் இழந்திருப்பதில் இவைகள் அதிகம். இதே போல அத்தனை துறை சார்ந்தோரும்     இப்போது உதவிக்கொண்டிருந்ததைப் போல மேலும் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.  


    அதுபோல சென்னையை மீட்டெடுப்பதில் பணி புரிந்து கொண்டிருக்கும் சுகாதாரத்துறை ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள், காவல்துறை ஊழியர்கள், துப்புறவு பணியாளர்கள் என்று எல்லோரும் பாராட்டுக்குரியவர்கள். இந்த நிலையில் உதவிகரம் நீட்டிய இளைஞர்களுக்கும், தொண்டு நிறுவனங்களுக்கும் எனது பாராட்டுக்கள்.
  

 சென்னைக்காக இணைவோம்
    இதயத்தால் இணைவோம்
    இணையத்தில் இணைவோம்
    இயக்கத்தால் இணைவோம்
    இயங்குவதில் இணைவோம்
    மீட்டெடுப்போம் சென்னையை.

                               

       இப்படிக்கு
                                 என்றும் மக்கள் பணியில்
                                    
                             (டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.