இந்தியாவில் அதிக வசதிபடைத்த  கோயில்களில் ஒன்றான மும்பை சித்தி விநாயர் கோயிலுக்கு சொந்தமான 40 கிலோ தங்கத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்த தங்க சேமிப்பு திட்டத்தில் டெபாசிட்செய்ய கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

40 கிலோ தங்கத்தை தங்கசேமிப்பு திட்டத்தின் கீழ் டெபாசிட்செய்வதன் மூலம் கோயில் நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு 69 லட்சரூபாய் வட்டியாக கிடைக்கும்.

விரைவில் கோயில் நிர்வாகம் தங்கத்தை அரசின் கட்டுப் பாட்டில் கொடுக்க இருக்கிறது. இந்ததிட்டத்தில் சேமிக்கப்படும் தங்கத்திற்கு 2 சதவீதம் முதல் 2.5 சதவீதம்வரை வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி சித்திவிநாயகர் கோயிலுக்கு ஆண்டுக்கு ரூ. 69 லட்சம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது சித்தி விநாயகர் கோயிலுக்கு சொந்தமாக 165 கிலோ தங்கம் உள்ளது. ஏற்கனவே 10 கிலோ தங்கத்தை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் டெபாசிட் செய்து வைத்துள்ளது. இதற்கு 1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வருகிறது.

40 கிலோ தங்கத்தை உருக்குவதற்கு கோயில் நிர்வா கத்தின் உறுப்பினர்களின் அனுமதிபெறப்பட்டு மாநில அரசிடமும் அனுமதி வாங்கிவிட்டோம். இந்த சேமிப்பின் மூலம் கிடைக்கும் வட்டிபணத்தை பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள நோயாளிகளின் மருத்துவ செலவுகளுக்காக பயன்படுத்த இருக்கிறோம் என்று கோயில் நிர்வாகத்தின் தலைமைசெயல் அதிகாரி சஞ்சீவ் பாட்டீல் தெரிவித்தார்.


தங்க சேமிப்பு திட்டம் மிகலாபகரமான திட்டம். அதனால் இந்த திட்டத்தின் கீழ் இன்னும் அதிகமாக டெபாசிட் செய்ய இருக்கிறோம். அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை சமூக நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துவோம் என்று கோயில் நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

இது திருப்பதி மற்றும் ஷீரடிகோயில்களில் உள்ள தங்கத்தை, தங்கசேமிப்பு திட்டத்தில் சேமிப்பதற்கு தூண்டுகோலாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

One response to “தங்க சேமிப்பு திட்டத்தில் இணையும் மும்பை சித்தி விநாயர்”

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.