மழையால் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளின் நலன்கருதி சிவில் சர்வீசஸ் தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என  பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

கடலூர் திருப்பாதிரிப் புலியூர் நத்த வெளிச்சாலையில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த குடிசைகளை பார்வையிட்டார். அப்போது அவரிடம், அங்குள்ள பொதுமக்கள் தங்களது குடிசைகளுக்குள் மழைவெள்ளம் புகுந்து, பொருட்கள் அனைத்தும் சேதம் அடைந்துவிட்டது. சுவர் இடிந்து விழுந்துவிட்டது என்று தெரிவித்தனர்.

இதையடுத்து குடிசை வீடுகளுக்குள் சென்று சேதங்களை பார் வையிட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது ; கன மழையால் கடலூர் மாவட்டம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளது கவலை அளிக்கிறது. 50 ஆயிரம்பேர் வீடுகளை இழந்து நிற்கிறார்கள். 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் சேதம்அடைந்துள்ளன.

மறு சீரமைப்பு பணிக்கு அரசு உடனடியாக உத்தரவிடவேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் முறையாக கிடைக்கிறதா என்பதை அரசு கண் காணிக்க வேண்டும். கடலூர் மாவட்டத்திலும் இயற்கை சீற்றத்தால் பாதிக்கப் படாத வகையில் வீடுகளை அரசு கட்டித்தர வேண்டும்.

சென்னையில் அதிகவெள்ள பாதிப்பு ஏற்படுவதற்கு நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளும் ஒரு காரணம். எனவே நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப் புகளை பாரபட்சமின்றி அகற்றவேண்டும். ஆக்கிரமிப்பாளர்கள் எந்த அரசியல் பின்புலம் உள்ளவர்களாக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

அரையாண்டு தேர்வை மாநில அரசு தள்ளி வைத்த தற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னமும் மின் சாரம் இல்லாமல் மக்கள் துன்பப்பட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாத நிலையில் ஒரு மாதத்துக்கான மின் கட்டணத்தை தள்ளுபடி செய்யவேண்டும்.

மழையால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு வருகிற 18–ந் தேதி நடைபெற உள்ள சிவில் சர்வீசஸ் தேர்வு, யூ.ஜி.சி. நெட் தேர்வு ஆகியவற்றை தள்ளி வைக்கவேண்டும்.


மழையில் நனைந்து சேதம் அடைந்த பாஸ்போர்ட்டுகளுக்கு பதில் புதிய பாஸ்போர்ட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என வெளியுறவுத் துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் அறிவித்துள்ளார். சமையல் கியாஸ் இணைப்பு பெறுவதற்கு முகாம் நடத்தவேண்டும் என பெட்ரோலியத்துறை மந்திரி உத்தரவிட்டுள்ளார். இவை உள்பட பல்வேறு சலுகைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி மழை வெள்ள சேதத்துக்காக ரூ.1,940 கோடி நிவாரணத்தை அறிவித்துள்ளார். மேலும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து மழையால் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்து இருக்கிறார்.

அரசியல் வேறுபா டுகளை களைந்து மழையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மக்கள் இயல்புநிலைக்கு திரும்ப மத்திய, மாநில அரசுகள் இணைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த சூழ்நிலையில் அரசியலை பயன்படுத்தி லாபம் தேடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.