சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங் கிணைந்த கல்வி மற்றும் வாழ் வாதார பயிற்சிகளை வழங்குவதற்கான 'நயீ மஞ்ஜில்' (புதிய தளம்) திட்டத்துக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டின் போது இதற்கான அறிவிப்பை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். இந்ததிட்டம் குறிப்பாக சிறுபான்மையின இளைஞர்களுக்கு ஒருங்கிணைந்த கல்வி மற்றும் வாழ்வாதார பயிற்சிகளை வழங்குவதற்காக கொண்டு வரப்படுவதாக அப்போது அவர் தெரிவித்தார்.

மேலும், பள்ளி படிப்பை பாதியில் கைவிட்ட அல்லது மதரஸா போன்ற மதக்கல்வி நிறுவனங்களில் பயின்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு, முறையான கல்வி (8 அல்லது 10-ம் வகுப்புவரை) மற்றும் திறன்வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும் நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அருண்ஜெட்லி கூறியிருந்தார். இந்த திட்டத்திற்கு கடந்த வாரம் மத்திய நிதித் துறை ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், 'நயீ மஞ்ஜில்' திட்டத்திற்கு மத்திய அமைச் சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சிறு பான்மையினர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்ட அல்லது மதரஸா போன்ற மதக்கல்வி நிறுவனங்களில் பயின்ற சிறுபான்மையின இளைஞர்களுக்கு, முறையான கல்வி (8 அல்லது 10-ஆம் வகுப்புவரை) மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகளை வழங்கும்நோக்கில், இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

நாடுமுழுவதும் ரூ.650 கோடி மதிப்பில் 5 ஆண்டுகளுக்கு செயல் படுத்தப்பட விருக்கும் இத்திட்டத்துக்கான 50 சதவீத நிதியு தவியை உலகவங்கி வழங்குகிறது. 'நயீ மன்ஜில்' திட்டத்தால் கவரப்பட்ட உலகவங்கி, இதேதிட்டத்தை செயல்படுத்த ஆப்ரிக்க நாடுகளுக்கும் பரிந்துரைப்பது குறித்து பரிசீலித்துவருகிறது" என்று கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.