வெள்ள நிவாரண பணிகளை விரைந்து மேற் கொள்ளும் வகையில் தமிழக சுங்கச்சாவடிகளில் வாகனங்களுக்கான சுங்கக்கட்டணம் வசூலிக்க விதிக்கப்பட்டிருந்த தடை வரும் 18ம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரை வழி போக்குவரத்துத் துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் செய்தியாளர்களிம் பேசியபோது இதனை தெரிவித்தார். ஏற்கனவே தமிழக சுங்கச் சாவடிகளில் வெள்ள நிவாரணப்பொருட்கள் தடையின்றி கொண்டுசெல்ல டிசம்பர் 11ம் தேதி வரை சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.

Leave a Reply