ஜப்பான் ஒத்துழைப்புடன் வாராணசி அபரிமி தமான வளர்ச்சியை எட்டும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோஅபே, நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியுடன் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசிக்கு சென்றார். அங்கு நடைபெற்ற "கங்கை ஆர்த்தி' நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு பிறகு மோடி பேசுகையில்,

உலகில் உள்ள ஜீவ ராசிகளுக்கும் உணவு, காற்று போன்ற உயிர் காரணிகளை காட்டிலும் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் உறவு மிகவும் அவசிய மானது. அதேபோல், ஜப்பானுக்கும், இந்தியாவுக்கும் இடையேயான உறவும் மிகவும் மகத் தானது. நீண்ட கால பாரம்பரிய மிக்க இந்த உறவு, எதிர்காலத்தில் மேலும் வலுவடையும்.

ஜப்பானின் க்யோட்டோ நகரத்துக்கும், இந்தியாவின் வாராணசி நகரத்துக்கும் இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப் பட்டுள்ளது. ஜப்பானின் ஒத்துழைப்புடன் வாராணசி அபரி மிதமான வளர்ச்சியை எட்டும் என நம்புகிறேன் என கூறினார்.

Leave a Reply