இந்திய பாரளுமன்றத்தின் மீது கடந்த 13-12-2001 அன்று ஆயுத மேந்திய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் ஒன்பதுபேர் பலியான சம்பவத்தின் 14-வது ஆண்டு நினவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

இந்த தாக்குதலில் டெல்லி போலீஸ்படையை சேர்ந்த ஐந்துபேர் மத்திய துணை ராணுவப்படையை சேர்ந்த பெண் அதிகாரி, இருபாராளுமன்ற காவலாளிகள், ஒரு தோட்டக் காரர் என ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே குண்டுகள் பாய்ந்து பலியாகினர்.

அவர்களுக்கு பாராளுமன்ற வளாகத்தில் இன்று நினைவு அஞ்சலி செலுத்தப் பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாராளுமன்ற சபா நாயகர் சுமித்ரா மகாஜன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மத்திய மந்திரிகள்,உள்ளிட்ட பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் எம்.பி.க்கள் பாராளுமன்ற தாக்குதலில் பலியான வர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply