டிசம்பர் 1ந்தேதி இரவு கடும் மழை ..இரண்டாம்தேதி சென்னை மற்றும் கடலுரின் தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாகியது.

 

1ந்தேதி பிற்பகல் 2 மணிக்கே சென்னை குரோம்பேட்டை விவேகானதா பள்ளியில் சேவாபாரதி அடுப்பு பற்றவைத்துவிட்டது. சுமார் 1500 உணவு  ,பொட்டலங்கள் உடனடியாக தயாரிக்கப்பட்டு குரோம் பேட்டை–தாம்பரம் ரயில் நிலையங்களில் "அல்லாடிக்கொண்டிருந்த" பயணிகளுக்கு விநியோகிக்கப்பட்டது..( கடும் மழையால் பலர் கடையை அடைத்துவிட்டு எஸ்கேப்)
 

இரண்டாம்தேதி மாலை செம்பரபாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டு "ஏரி "களில்  கட்டிய வீடுகள் –அப்பார்ட்மெண்ட்" முழ்கத்தொடங்கியது..ஆங்காங்கே இருந்த "ஸ்வயம் சேவகர்கள்" எந்த கட்டளையும் எதிர்பார்க்காமல் இரவோடு இரவாக மக்களை காப்பாற்றும் பணியில் இறங்கினர்..
 

3ந்தேதி காலை ஆர்.எஸ்.எஸ்.அலுவலகத்தில் "பரிவார் இயக்க " நிர்வாகிகள் கூடி புரசைவால்கம் சேவாபாரதி அலுவலகம்,– பாஜக கமலாலயம், —-குரோம்பேட் பள்ளி என 3 பகுதிகள் உடனடியாக செயல் படத்துவன்கினர் ..
 

முதலில் காப்பாற்றுதல்–மற்றும் மீட்பு பனி

இரண்டாவது தங்கவைத்தால் மற்றும் உணவு

முன்றாவதாக நிவாரணம் மறுவாழ்வு
 

ஆ.ர.எஸ்.எஸில் சாதாரணமாக எந்த விஷயத்தையும் குறித்து வைத்துக்கொள்ளும் பழக்கம் உண்டு.. கூட்டங்களில் "நடந்தவற்றை" சொல்லும் பொது அது புள்ளி விவரமாக இருக்கும்..அந்த புள்ளிவிவரம் பெரும்பாலும் 100 சதவீதம் சரியாக(உண்மையாக) இருக்கும்
 

இதுவரை அங்கிருந்து கிடைத்த விவரங்கள்
 

1.சென்னையை 17 பகுதிகளாக பிரித்து அதில் 112 மய்யங்களில் பணி
 

2..இதில் காஞசிபுரம்– கடலூர் பகுதியில் பணியில் இடுபட்டுள்ள 29 மையங்களும் அடங்கும்
 

3.இதுவரை 18 லட்சம் உணவுப்பொட்டலங்கள் கொடுக்கப்பட்டுள்ளது ..இது தவிர 8 லட்சம் சப்பாத்திகளும் உண்டு
 

4.–35000 குடும்பங்களுக்கு வீட்டு உபயோகப்பருட்களில் உடனடித்தேவையான

குடம்–மக்கு–தீப்பெட்டி –மெழுகுவர்த்தி–பாய்–தட்டு–டம்ளர்–பிளீச்சிங் பவுடர்–பினாயில்–அரிசி –பருப்பு–காய்கறிகள் –எண்ணெய் கொண்ட ஒரு பாக்கட் கொடுக்கப்பட்டுள்ளது –இதை இன்னும் ஒரு லட்சத்து இருபத்தைந்தாயிரம் குடும்பங்களுக்கும் நீட்டிக்க முயற்ச்சி நடந்து வருகிறது..

 

5–இது தவிர இருசக்கரவாகன பழுது நீக்கும் முகாம் 22 இடங்களில் ஸ்ரீராம் நிறுவனத்துடன் இணைந்து நடந்து வருகிறது..இதி ரூ 500 பெருமான உதிரிபாகங்களும்–சர்வீசும் இலவசம்
 

6..பதிமுன்று மாநகராட்சி பள்ளிகள் முழுவதுமாக கன்னாடி போல சுத்தம் செய்யப்பட்டிருக்கிறது..
 
7..–115 மருத்துவ முகாம் களில் , இதுவரை 35,000 பேருக்கு சிகிச்சை மற்றும் இலவச மருன்து வழங்க பட்டுள்ளது..இதில் 165 டாக்டர்கள் வைத்தியம் பார்த்துள்ளனர்..
 
8..இந்த சேவை பணியில், 11,780, ஆ.எஸ்.எஸ். மற்றும் சேவாபாரதி பாஜக தொண்டர்கள் இடுபட்டுள்ளனர்.

 

9–.ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கேஸ் ஸ்டவ் மற்றும் ஒரு கொசுவலை கொடுக்கும் திட்டமும் உள்ளது
 

10–இந்த மனிதநேயப்பணியில், சாதி, மத, மொழி, மாகான எல்லைகளை கடந்து, இந்து முஸ்லீம், கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் உதவி மற்றும் உணவு வழ்ங்கப்பட்டுள்ளது.. 11..ஆங்காங்கே முஸ்லீம் இயக்கத்தை சேர்ந்த "தொண்டாளர்களுடன் " சேர்ந்து பணியாற்றியும், பொருட்கள் "கொடுத்து–வாங்கியும்" பணியாற்றிய நல்ல அனுபவங்கள் நடந்தேறியுள்ளது.
 
இவ்வளவு செய்த்தேன் என்கிறீர்களே –உங்களை தொலைகாட்சியில் காட்டவில்லையே என வெளியூர்களில் இருந்து பலர் எங்களை கேட்ட வண்ணம் இருந்தனர்
 
தொலைகாட்சியில் வரவேண்டும் என்பதற்காக செய்பவர்கள் அல்ல நாங்கள்..
 
ஆனாலும், ஒருசிலரை மட்டுமே குறிவைத்து தொலை காட்சிகள், காண்பித்தன –அல்லது இருட்டடிப்பு செய்தன –என்ற குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா?–இது ஊடகங்களுக்கே வெளிச்சம்..
 
அவர்கள் ஆத்மா பரிசோதனை செய்துகொண்டால், எங்களுக்கு எவ்வளவு "ஸ்பேஸ் "–கொடுத்தார்கள் என்பது அவர்களுக்கே தெரியும்
 
எனவே இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா? தெரியாமல் நடந்ததா? அரிநது செய்யப்பட இருட்டடிப்பா?
அல்லது இந்து இயக்கங்கள் மீது உள்ள "இன்டாலரன்ஸ்"ஆ கொஞ்சம் யோசியுங்கள் பிளீஸ்
 

நன்றி ; எஸ்.ஆர்.சேகர்

மாநில பொருளாளர் மற்றும்

செய்திதொடர்பாளர்–பாஜக

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.