எல்லையை பாதுகாப்பதிலும், பயங்கர வாதத்தை ஒடுக்குவதிலும் மத்திய அரசு அதிக முன்னுரிமை தருகிறது என பா.ஜ.க, தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் வசுந்தரா ராஜே தலைமையிலான பா.ஜ.க, ஆட்சி அமைந்து இரண்டு ஆண்டுகள் ஆனதைமுன்னிட்டு ஜெய்ப்பூரில் நடைபெற்ற பேரணியில், கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா கலந்துகொண்டார்.


அவர் பேசியதாவது : பொருளாதாரவளர்ச்சி, விவசாயிகளின் பிரச்னைகளைத் தீர்ப்பது உள்ளிட்ட விவகாரங்களில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு வேகம்காட்டி வருகிறது. விவசாயிகளுக்கு நிவாரணம் தொடர்பான விதிகளை தளர்த்தியும், புயல் உள்ளிட்ட பேரிடர் சம்பவ ங்களுக்கு 33 சதவீதத்துக்கு மேல் நிவாரணம் வழங்கியும் உதவிவருகிறது.


பிரதமர் மோடி தலைமையிலான மத்தியஅரசின் மற்றொரு மைல்கல் முத்ராவங்கி திட்டம். இதன் மூலம், குறைந்தவட்டி விகிதத்தில் ஏழை இளைஞர்கள் தொழில் துவங்க கடன்பெறலாம். இத்கு எந்த உத்தரவாதமும் தேவையில்லை.


மேலும், எல்லை பாதுகாப்பிலும், பயங்கர வாதத்தை ஒடுக்குவதிலும் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளித்துவருகிறது. இதில் சகிப்புத்தன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. கடந்த 2013-ம் ஆண்டில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச்பகுதியில் இந்திய ராணுவ வீரர் ஹேம ராஜின் தலையை துண்டித்து, பாக்., ராணுவத்தினர் தொங்கவிட்டனர். அது போன்ற செயல்களை தற்போது அவர்களால் தைரியமாக செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply