கோவா மாநிலம் பனாஜியில் மத்திய ராணுவமந்திரி மனோகர் பாரிக்கர் தனது 60வது பிறந்த நாள்விழாவை நேற்று கொண்டாடினார். விழாவில் மத்தியமந்திரிகள் ராஜ்நாத் சிங், நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய மந்திரி மனோகர்பாரிக்கர் பேசுகையில், ‘சென்னையில் பெய்த கன மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக ராணுவ வீரர்களையும், விமானப் படையையும் உடனடியாக அனுப்பிவைத்தோம். கட்டிடங்களில் சிக்கியபலரை உயிருடன் வீரர்கள் மீட்டுள்ளனர். வெள்ளமீட்பு பணியில் ராணுவத்தின் பணி பாராட்டத்தக்கது’ என்று தெரிவித்தார்.

Leave a Reply