பாராளுமன்றத்தின் மழைக் கால கூட்டத் தொடர் முடங்கியதைப்  போலவே, நடப்பு குளிர் கால கூட்டத் தொடரும் முடங்கும் அபாயம் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்தார்.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை சொத்து பரிவர்த்தனை தொடர்பாக நிதி முறைகேடு நடந்துள்ளது என்று பாஜகவின் சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தவழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் 19ம் தேதி அன்று அவர்கள் ஆஜராக வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதித் துறையை பயன்படுத்தி பிரதமர் மோடியும், மத்திய அரசும் அரசியல் பழி வாங்கப்பார்க்கிறது என்று சோனியாகாந்தியும், ராகுல் காந்தியும் குற்றம் சாட்டினார்கள்.

இந்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் காங்கிரசை மோடி அரசியல் பழிவாங்குகிறார்  என்று காங்கிரஸ் எம்.பிக்கள் ராஜ்யசபாவை நடக்க விடாமல் முடக்கி வருகிறார்கள். இதனால் அவையில் எந்த வித நடவடிக் கைகளும்  நடக்கவில்லை.

இந்த நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லி பேஸ் புக்கில் கூறியிருப்பதாவது,

 பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் எந்த வித நடவடிக்கைகளும் நடக்காமல் முடங்கியது. அதேப் போன்று தற்போதைய குளிர் கால கூட்டத் தொடரும் முடங்கும் அபாயம் உள்ளது. பொது விவகாரங்களை பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று நாடு எதிர்நோக்கியுள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி) திருத்த மசோதாவை சட்டமாக இயற்ற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இவை அனைத்தும் கால வரையின்றி தாமதமாகி வருகிறது. இந்த நிலையில் நாம் நியாயமாக நடந்துகொள்கிறோமா, நாட்டிற்கு நியாயமாக நடந்து கொள்கிறோமா என்று கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 1967ம் ஆண்டு மார்ச் மாதம் 28ம் தேதியன்று ஜவகர் லால் நேரு முதல் லோக்சபாவின் கடைசி நாளில் உரை நிகழ்த்தினார். அதனை அனைவரும் படித்து பார்க்கவேண்டும். இந்திய நிர்வாகத்தை நிர்வகிக்கும் கடமை பாராளுமன்றத்தில் அமர்ந்திருக்கும் நம் அனைவருக்கும் உள்ளது.என அவர் உரை நிகழ்த்தினார்.

 ராஜ்யசபாவில் காங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து இடையூறு ஏற்படுத்தி வருகிறார்கள். நேரு வின் மரபில் வந்தவர்கள் என கூறுபவர்கள் தாங்கள்,என்ன மாதிரியான வரலாற்றை உருவாக்குகிறோம் என்பது குறித்து கேள்வி எழுப்பிக்கொள்ள வேண்டும் இவ்வாறு அருண் ஜெட்லி பேஸ் புக்கில் காங்கிரஸ் உறுப்பினர்கள் செயல்பாட்டை விமர்சித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.