தீவிரவாதத்தை மோடி தலைமையிலான மத்தியஅரசு சிறிதும் சகித்துக்கொள்ளாது’ என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்  கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதன் 14ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப் பட்டது. இந்த  தாக்குதலின்போது, நடந்த துப்பாக்கி சண்டையில் டெல்லிபோலீசார் 5 பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். உயிர்த் தியாகம் செய்த வீரர்களை நினைவு கூரும் வகையில் நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று மவுன அஞ்சலி செலுத்தப் பட்டது.

வீரர்களின் படத்திற்கு பிரதமர் மோடி. மக்களவை தலைவர் சுமித்ரா மகாஜன், பாஜக் மூத்தத் தலைவர் எல்.கே.அத்வானி,  உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள் மலர் தூவி  மரியாதை செலுத்தினர்.

பின்னர் ராஜ்நாத்சிங் கூறுகையில், ‘தீவிரவாதத்தை சிறிதும் சகித்து கொள்ளாத கொள்கையை மத்தியஅரசு கொண்டுள்ளது. இந்தியாவை மிகவும்  பாதுகாப்பான நாடாக வைத்திருக்க நாங்கள் உறுதிகொண்டுள்ளோம். நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்த்தியாகம் செய்த பாதுகாப்புபடை வீரர்களின்  தியாகத்தை இந்ததேசம் ஒருபோதும் மறக்காது’ என்றார்

Leave a Reply