தூய்மை இந்தியா திட்டத்திற்கு, உலகவங்கி 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க ஒப்புதல்அளித்துள்ளது. மகாத்மா காந்தியடிகளின் கனவுத் திட்டமான தூய்மை இந்தியா திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்தியஅரசு, 2014ம் ஆண்டில் காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 02ம் தேதி கோலாகலமாக துவக்கியது.


இந்ததிட்டத்தை மக்களிடம் சேர்க்கும் வண்ணம், கமல், அமீர்கான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் இதில் தூதர்களாக நியமி்க்கப்பட்டனர். தூயமை இந்தியா திட்டத்தின் நடவடிக்கைகள் துவங்கி நடைபெற்று வருகின்றன. தூயமை இந்தியா திட்டத்தின் முக்கியநோக்கமே, அனைவருக்கும் சுகாதாரமான வாழ்வை அளிப்பதே ஆகும்.


உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, சர்வதேச அளவில், 2.4 பில்லியன் மக்கள் சுகாதாரமற்ற வாழ்க்கையையே வாழ்ந்துவருகின்றனர். இவர்களில் 750 மி்ல்லியனுக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வசித்துவருகின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசித்து வருகின்றனர்.


500 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் திறந்தவெளியில்தான் மலம்கழித்து வருகின்றனர். இதன்காரணமாக, அவர்களுக்கு எண்ணற்ற நோய்கள் ஏற்பட்டு அவர்கள் இளம் வயதிலேயே மரணத்திற்கு ஆட்படுகின்றனர். இந்தியாவில், பத்தில் ஒருவர், சுகாதார குறைவினால் மரண மடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டுமக்களுக்கு சுகாதாரவசதிகள் முழுமையாக கிடைக்கும் பொருட்டு, மேற்கொள்ளப்பட்டுள்ள தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கம் வெற்றிபெறுவதற்கு ஏதுவாக, 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடனுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.