டெல்லி கிரிக்கெட் சங்கமுறைகேடு விவகாரத்தில், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பதவி விலக வலியுறுத்தி மாநிலங் களவையில் காங்கிரஸ் கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவை நிகழ்வுகள் பாதிக்கபட்டன.

 

இதன் காரணமாக அடுத் தடுத்து இரண்டு முறை மாநிலங்களவை ஒத்திவைக்கப் பட்டது. இதனிடையே, முறைகேட்டு புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் அருண் ஜெட்லி விரைவில் மீண்டுவருவார் என்று பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்துள்ளார்.

 

பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்பேசிய அவர், ஹவாலா வழக்கில் சிக்கிய மூத்த தலைவர் அத்வானி, அதில் இருந்து மீண்டுவந்தது போல், அமைச்சர் அருண்ஜெட்லியும் விரைவில் மீண்டுவருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply