பல அலுவலக பணிகளுக்கு இடையே பிரதமர் பேஸ்புக் மற்றும் டுவிட்டர் பக்கத்தை அவரே நிர்வகித்து கொள்கிறார் என தகவல் அறியும் உரிமைசட்டம் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டை கடந்த மே 26-ம் தேதி நிறைவுசெய்தது.

இந்நிலையில் பிரதமராக பதவியேற்றதில் இருந்து அவரது அலுவலகபணி குறித்தும் அவர் எடுத்துள்ள விடுப்புகள் குறித்தும் தகவல் அறியும் உரிமைசட்டத்தின் மூலம் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பிரதமராக பதவி ஏற்ற நரேந்திரமோடி ஓராண்டுக்குள் 89 நாட்களில் 18 வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு ள்ளார்.

மக்களை தொடர்பு கொள்வதற்கு சமூக வலைத் தளங்களை பயன் படுத்துவதில் மோடி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். அவர் பிரதமராக பதவி ஏற்றபின்னர் பிரதமர் அலுவலகத்துக்குகென அதிகாரபூர்வ ‘பேஸ்புக்" எனப்படும் சமூகவலைத்தள பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. பல அலுவலக பணிகளுக்கு இடையே அவரது பேஸ்புக், டுவிட்டர் பக்கத்தை அவரே நிர்வகித்து கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது 

Leave a Reply