இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல்சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக் கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி – கொழும்பு மற்றும் இராமேஸ்வரம் – தலை மன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய கடல் வழித் தடங்களை விரைவில் தொடங்க இந்திய அரசு முயற்சிகளை முன்னெடுத்துள்ளதாக கப்பல் போக்குவரத்து துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்திய – இலங்கைக்கு இடையேயான கப்பல் போக்கு வரத்து சேவைகள் விரைவில் தொடங்கப்படும் என்று இலங்கை அரசின் துறைமுக மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவும்  தெரிவித்தார்.

தென்னிந்தியா மற்றும் வட இலங்கை இடையேயான உறவுகளை ஊக்குவிக்கவே இந்ததிட்டம் செயல்படுத்தப் படுவதாகவும் அர்ஜுன ரணதுங்க குறிப்பிட்டார்.

தென்னிந்தியாவிலிருந்து வட இலங்கைக்கு விமானம் மூலம் பயணிப் போரின் சிரமங்களை போக்க இந்தத்திட்டம் உதவும் என்றும் அவர் கூறினார்.

இந்த கப்பல்சேவைகள் தொடங்கப்படும் பட்சத்தில், இந்தியாவிலிருந்து தாயகம்திரும்ப விரும்பும் இலங்கை அகதிகளுக்கு அது மிகப் பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் என்று இலங்கையில் உள்ள அகதிகளுக்கான ஐ.நா ஆணையத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் சிலமாதங்களுக்கு முன்னதாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்திய மாநிலங்கள் அவையில் அளித்திருந்த பதிலில், பங்களாதேஷ் மற்றும் இந்தியாவின் கடலோர போக்கு வரத்தை ஊக்குவிக்கும் ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப் பட்டுள்ளது என்றும், அதேபோன்று இந்தியா-மியன் மாருக்கு இடையே சரக்கு கப்பல் போக்கு வரத்து கடந்த 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது எனவும் பொன் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply